நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

பேடோங்டர்ன் தாய்லாந்தின் இரண்டாவது பெண் பிரதமர் ஆவாரா?

பேங்காக்:

தாய்லாந்து நாட்டு அமைச்சரவையில் பிச்சித் சைபான் என்பவர் கடந்த ஏப்ரல் மாதம் அமைச்சராக நியமிக்கப்பட்டார். இவர், கடந்த 2008-ஆம் ஆண்டு, நீதிபதிக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைதாகி 6 மாதங்கள் சிறைத் தண்டனை பெற்றவர் ஆவார். 

அவரை அமைச்சராக்கியது அந்நாட்டில் சர்ச்சையை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, அந்தப் பதவியை, பிச்சித் சைபான் ராஜினாமா செய்தார். 

இந்த நிலையில், பிச்சித் சைபானை அமைச்சராக நியமிக்க பரிந்துரை செய்த தாய்லாந்து பிரதமர் ஸ்ரெத்தா தவிசினை பதவிநீக்கம் செய்து அந்நாட்டின் அரசியலமைப்பு நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது.

இதுதொடர்பாக நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், “அமைச்சராக நியமிக்கப்பட்ட பிச்சித், ஒழுங்கீனம் காரணமாக சிறைத் தண்டனை பெற்றவர் என்பதை அறிந்தும், அவரை அமைச்சராக பிரதமர் ஸ்ரெத்தா தவிசின் நியமித்துள்ளார். 

இதன்மூலம் அரசியல் சாசனத்தின் ஒழுக்க நெறிமுறை விதிகள் மீறப்பட்டுள்ளன. இதனால் பிரதமர் ஸ்ரெத்தா தவிசின் பதவி நீக்கம் செய்யப்படுகிறார்’’ எனத் தெரிவித்தது. 

தற்போது ஸ்ரெத்தா தவிசின் பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், புதிய பிரதமரை நாடாளுமன்றம் அங்கீகரிக்கும் வரை அமைச்சரவை பராமரிப்பு அரசு எனும் அடிப்படையில் இயங்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், புதிய பிரதமர் வேட்பாளரை தேர்வுசெய்யும் பணியில் ஆளும்கட்சியான பியூ தாய் கட்சி தீவிர ஆலோசனை மேற்கொண்டது. 

முன்னாள் நீதித்துறை அமைச்சர் சாய்காசெம் நிதிசிரி மற்றும் முன்னாள் பிரதமர் தக்சின் ஷினவத்ராவின் இளைய மகள் பேடோங்டர்ன் ஷினவத்ரா ஆகியோரின் பெயர்கள் முன்னிலையில் இருந்தன. 

இவர்களில், பேடோங்டர்ன் ஷினவத்ராவை கட்சி தலைமை தேர்வுசெய்து இன்று அறிவித்துள்ளது.

பேடோங்டர்ன் ஷினவத்ராவுக்கு பிரதமர் பதவி வழங்க கூட்டணி கட்சிகளும் ஒப்புதல் அளித்தன. புதிய பிரதமரைத் தேர்ந்தெடுப்பதற்காக நாளை நாடாளுமன்றம் கூடுகிறது. அப்போது, பிரதமர் பதவிக்கான வாக்கெடுப்பு நடத்தப்படும். 

வாக்கெடுப்பில் பேடோங்டர்ன் வெற்றி பெற்று, நாடாளுமன்றம் அங்கீகரித்தபின் அவர் முறைப்படி பிரதமராக பதவியேற்பார். அத்துடன் அவர் தாய்லாந்தின் இரண்டாவது பெண் பிரதமர் என்ற பெருமையை பெறுவார்.

பேடோங்டர்ன் தாய்லாந்தின் இரண்டாவது பெண் பிரதமர் ஆவாரா? இல்லையா என்பது விரைவில் தெரிந்துவிடும்.

- ஃபிதா

தொடர்புடைய செய்திகள்

+ - reset