நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

குரங்கம்மைத் தொற்று உலகப் பொதுச் சுகாதார நெருக்கடி: WHO அறிவிப்பு 

ஜெனிவா: 

உலகச் சுகாதார நிறுவனம் ( World Health Organization (WHO) குரங்கம்மைத் தொற்றை (mpox) உலகப் பொதுச் சுகாதார நெருக்கடியாக அறிவித்திருக்கிறது.

அப்படி அறிவிக்கப்படுவது இது இரண்டாவது முறை ஆகும்.

மத்திய ஆப்பிரிக்க நாடான கோங்கோ பெரிய அளவில் mpox நோய்ப் பரவலைச் சந்திக்கிறது. அங்கு பொதுமக்கள் அதிக அளவில் பாதிப்புக்குள்ளாகி வருகிறார்கள்.

அந்த அம்மை நோய் பக்கத்து நாடுகளுக்கும் பரவி வருவதால் உலகச் சுகாதார நிறுவனம் அஞ்சுகிறது. அதனை உடனடியாக தடுத்து நிறுத்த விழிப்புணர்வு பிரச்சாரங்கள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

பொதுச் சுகாதார நெருக்கடி அறிவிக்கப்பட்டால் நோய் குறித்த ஆய்வு தீவிரம் அடையும். பணம் திரட்டுவதும், நோய் பரவாமல் தடுக்கும் நடவடிக்கைகளும் விரைவுபடுத்தப்படும்.

உயிர்களைக் காப்பாற்றவும் நோய்ப்பரவலைத் தடுக்கவும் அனைத்துலக அளவில் ஒன்றுசேர்ந்து செயல்படுவது அவசியம் என்றார் உலகச் சுகாதார நிறுவனத்தின் தலைமை இயக்குநர் டெட்ரோஸ் கேப்ரியேசஸ் (Tedros Ghebreyesus).

நெருங்கிய தொடர்பில் இருப்பவர்கள் மத்தியில் குரங்கம்மை நோய் பரவக்கூடும் என்பதால் எச்சரிக்கையுடன் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆதாரம்: Reuters

தொடர்புடைய செய்திகள்

+ - reset