நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

ஹிந்துக்கள் மீதான தாக்குதலைத் தடுக்க கோயிலுக்கு சென்றார் முஹம்மது யூனுஸ்

டாக்கா: 

வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீதான தாக்குதலைத் தடுக்க கோயிலுக்கு சென்றார் இடைக்கால அரசின் தலைவர் முஹம்மது யூனுஸ்.

சிறுபான்மையினர் மீது தாக்குதல் நடத்தியவர்களை அரசு தண்டிக்கும் என்று முஹம்மது யூனுஸ் உறுதி அளித்தார்.

வங்கதேச பிரதமர் பதவியில் இருந்து ஷேக் ஹசீனா ராஜிநாமா செய்து நாட்டை விட்டு ஓடிய பின்னர், அந்நாட்டின் 48 மாவட்டங்களில் உள்ள 278 இடங்களில் ஹிந்துக்களுக்கு எதிராக தாக்குதல் மற்றும் அச்சுறுத்தல் சம்பவங்கள் நிகழ்ந்ததாக வங்கதேச தேசிய ஹிந்து மகா கூட்டணி குற்றம்சாட்டியுள்ளது.

இந்நிலையில், டாக்காவில் உள்ள தாகேஸ்வரி கோயிலுக்கு அந்நாட்டு இடைக்கால அரசின் தலைவரான முஹம்மது யூனுஸ் சென்றார்.

அனைவருக்கும் இங்கு சம உரிமைகள் உள்ளன. எவரையும் முஸ்லிம், ஹிந்து அல்லது பௌத்த மதத்தைச் சேர்ந்தவராகப் பார்க்காமல் மனிதராகப் பார்க்க வேண்டும். வங்கதேசத்தில் சிறுபான்மையினர் மீது தாக்குதல் நடத்தியவர்களை அரசு தண்டிக்கும் என்றார்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset