நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

நியூசிலாந்தில் methamphetamine போதைப்பொருள் கொண்ட அன்னாசி மிட்டாய்களைக் கடைகளிலிருந்து மீட்கும் பணி தீவிரம்

வெலிங்டன்:

நியூசிலாந்தின் அறநிறுவனம் வழங்கிய அன்னாசி மிட்டாய்களில் methamphetamine எனும் போதைப்பொருள் அதிக அளவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடைகளிலிருந்து அந்த மிட்டாய்களை மீட்கும் பணி தீவிரமடைந்துள்ளது.

Auckland City Mission எனும் வறுமைக்கு எதிரான அறநிறுவனம், மிட்டாய்களில் போதைப்பொருள் இருப்பதைக் கண்டுபிடித்தவுடன் காவல்துறையிடம் தெரிவித்தது.

விசாரணை தொடர்வதாகவும் பொதுமக்களுக்கு அது ஆபத்தை விளைவிக்கக்கூடியது என்பதால் அதிக கவனம் செலுத்தப்படுவதாய்க் காவல்துறை தெரிவித்தது.

மஞ்சள் நிறத் தாளில் மடிக்கப்பட்ட வெள்ளை மிட்டாயில் சுமார் 3 கிராம் methamphetamine போதைப்பொருள் இருப்பது சோதனையில் தெரியவந்தது.

பயனீட்டாளர்கள் பொதுவாக எடுக்கும் அளவைவிட அது பல நூறு மடங்கு அதிகம் என்று தெரிவிக்கப்பட்டது.

அந்த அளவிற்கு methamphetamine போதைப்பொருளை உட்கொள்வது மிகவும் ஆபத்தானது என்றும் அது மரணத்தை விளைவிக்கக்கூடியது என்றும் கூறப்பட்டது.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset