
செய்திகள் வணிகம்
சிங்கப்பூரின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2% முதல் 3% வளர்ச்சி அடையும்
சிங்கப்பூர்:
சிங்கப்பூரின் மொத்த உள்நாட்டு உற்பத்தி ஜிடிபி இவ்வாண்டு 2 விழுக்காடு முதல் 3 விழுக்காடு வரை வளர்ச்சி அடையும் என்று வர்த்தக தொழில் அமைச்சு கணித்துள்ளது.
சிங்கப்பூர் நாணய ஆணையமும் ஜூலை 26ஆம் தேதியன்று இக்கருத்தை முன்வைத்தது.
இதற்கு முன்பு சிங்கப்பூரின் பொருளியல் 1 விழுக்காடு முதல் 3 விழுக்காடு வரை ஏற்றம் காணும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இவ்வாண்டின் முதல் பாதியில் சிங்கப்பூர் பொருளியலின் நிலை, ஆக அண்மைய உலகளாவிய, உள்ளூர் பொருளியல் சூழ்நிலைகள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு நாட்டின் பொருளியல் 2 விழுக்காடு முதல் 3 விழுக்காடு வரை வளர்ச்சி அடையும் என்று கணிக்கப்பட்டுள்ளதாக அமைச்சு கூறியது.
2024ஆம் ஆண்டின் முதல் பாதியில், சிங்கப்பூர் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி ஆண்டு அடிப்படையில் சராசரியாக 3 விழுக்காடு வளர்ச்சி அடைந்தது.
அமைச்சு முன்னுரைத்ததைப் போலவே இவ்வாண்டின் இரண்டாம் காலாண்டில் சிங்கப்பூரின் பொருளியல் 2.9 விழுக்காடு வளர்ச்சி கண்டது.
முதல் காலாண்டில் சிங்கப்பூரின் பொருளியல் 3 விழுக்காடு வளர்ச்சி கண்டது.
காலாண்டு அடிப்படையில் பொருளியல் 0.4 விழுக்காடு வளர்ச்சி அடைந்தது.
மொத்த விற்பனை, நிதி மற்றும் காப்புறுதி, தகவல் மற்றும் தொடர்பு ஆகிய துறைகளில் ஏற்பட்ட வளர்ச்சி, இரண்டாம் காலாண்டில் பொருளியல் வளர்ச்சி அடைய முக்கிய காரணமாக இருந்ததாக அமைச்சு கூறியது.
இருப்பினும், உற்பத்தித்துறையின் வளர்ச்சி வீழ்ச்சி அடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 1, 2025, 12:28 pm
கடந்த 9 மாதங்களில் இல்லாத அளவுக்கு ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு
June 23, 2025, 8:22 pm
ஈரான் இஸ்ரேல் போரினால் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் தொடர்ந்து சரிவு
June 23, 2025, 10:51 am
உலகச் சந்தையில் பதற்றம்: மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு வலுவடைந்தது
June 16, 2025, 4:21 pm
விற்பனை, உணவுத் திருவிழா; இந்திய தொழில்முனைவோருக்கு அரிய வாய்ப்பு: வ.சிவகுமார்
June 13, 2025, 10:09 pm
டாலருக்கு எதிராக இந்திய ரூபாய் சரிந்தது
June 11, 2025, 5:48 pm