நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

பிக் பாஸ் தமிழ்  நிகழ்ச்சியிலிருந்து விலகுவதாக நடிகர் கமல்ஹாசன் அறிவிப்பு 

சென்னை: 

பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியிலிருந்து விலகுவதாக உலகநாயகன் கமல்ஹாசன் அறிவித்தார். பிக் பாஸ் நிகழ்ச்சியின் தொகுப்பாளராக தாம் இத்தனை வருடங்களாக இருந்து வந்தது குறித்து நடிகர் கமல்ஹாசன் ஓர் அறிக்கையின் வாயிலாக தெரிவித்துள்ளார். 

தான் சார்ந்திருக்கும் அல்லது படப்பிடிப்பில் சில படங்களின் படிப்பிடிப்புகலில் கலந்து கொள்ளவிருப்பதால் பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து தாம் விலகுவதாக அறிவித்தார். 

பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சி மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஒரு நிகழ்ச்சியாகும். 1ஆவது சீசன் தொடங்கி 7ஆவது சீசன் வரை உலகநாயகன் கமல்ஹாசன் பிக் பாஸ் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி வந்தார். 

உலகநாயகன் கமல்ஹாசன் பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து விலகியுள்ளதால் அடுத்த தொகுப்பாளரைத் தேடும் பணிகளில் பிக் பாஸ் குழு மும்முரமாக இறங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset