செய்திகள் கலைகள்
ரோமியோ ஜூலியட் பட நாயகி ஒலிவியா காலமானார்
ஹாலிவுட்
பிரபல ஹாலிவுட் நடிகை ஒலிவியா ஹஸ்ஸி (Olivia Hussey). 73 வயதான இவர் கடந்த 1968-ம் ஆண்டு தனது 14 வயதில் ‘ரோமியோ ஜூலியட்’ படத்தில் ஜூலியட்டாக நடித்து உலகம் முழுவதும் புகழ்பெற்றவர்.
இந்தப் படத்துக்காக கோல்டன் குளோப் உட்பட பல விருதுகளைப் பெற்றார். தொடர்ந்து ‘சம்மர் டைம் கில்லர்’, ‘பிளாக் கிறிஸ்துமஸ்’, ‘டெத் ஆஃப் நைல்’, ‘ஐஸ்கீரிம் மேன்’ உட்பட பல படங்களில் நடித்துள்ளார். சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ள இவர், கடைசியாக 2015-ல் வெளியான, ‘சோஷியல் சூசைட்’ என்ற படத்தில் நடித்திருந்தார்.
அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியாவில் வசித்து வந்த இவருக்கு கடந்த 2008-ம் ஆண்டு மார்பக புற்றுநோய் கண்டறியப்பட்டு, அதற்காக சிகிச்சைப் பெற்றார். பின்னர் 2018-ம் ஆண்டு மீண்டும் புற்றுநோய் கண்டறியப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் அவர் நேற்று முன் தினம் காலமாகிவிட்டதாக அவருடைய குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். ஹாலிவுட் திரை பிரபலங்கள் அவர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
September 30, 2026, 3:27 pm
நடிகர் சூரியின் மண்டாடி திரைப்படம் 140 கோடி ரூபாய் வசூல் சாதனை
September 30, 2026, 3:17 pm
வெங்கட் பிரபு - சிவகார்த்திகேயன் இடையிலான படம் கைவிடப்பட்டது: வெங்கட் பிரபு எக்ஸ் தளத்தில் பதிவு
September 25, 2026, 2:54 pm
டோரொத்தி திரைப்படத்திற்கு மலேசியாவில் தடை ? LGBTQ அம்சங்கள் உள்ளதால் தணிக்கை வாரியம் உத்தரவு
September 15, 2026, 11:38 am
இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் பார்வையில் வில்லன்கள்: திரைக்கதையின் உயிரோட்டம்
September 15, 2026, 11:29 am
ONDRA RENDA -25 YEARS OF GVM : GVM-இன் ஹீரோக்கள் – ஸ்டைலுக்கும் உணர்வுக்கும் ஒரு முகம்
September 14, 2026, 5:25 pm
பிக் பாஸ் தமிழில் முதலமைச்சர் விஜய்யை சீண்டினாரா நடிகர் விஜய் சேதுபதி ? சமூக ஊடகங்களில் வெடித்தது கலவரம்
September 10, 2026, 4:45 pm
