நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

சுவிட்ஸர்லாந்து திரைப்பட விழாவில் ஷாருக் கானுக்கு விருது

பெர்ன்:

சுவிட்ஸர்லாந்தின் லக்கார்னோ (Locarno) திரைப்பட விழாவில் பாலிவுட் நட்சத்திரம் ஷாருக் கானுக்கு (Shah Rukh Khan) சிறப்பு விருது வழங்கப்படவுள்ளது.

1946ஆம் ஆண்டிலிருந்து நடைபெற்று வருகிறது வருடாந்திர லக்கார்னோ திரைப்பட விழா.

அந்த விழாவில் ஷாருக் கானுக்கு Pardo alla Carriera எனும் விருது வழங்கப்படவுள்ளது.

வரும் சனிக்கிழமை (10 ஆகஸ்ட்) அவர் அந்த விருதைப் பெறுவார்.

சினிமாத்துறையில் புதிய பரிமாணத்தைக் கொண்டுவந்தோருக்கு அந்த விருது வழங்கப்படுகிறது.

இந்தியத் திரைப்படத்துறையில் ஷாருக் கானின் பங்களிப்பு அளப்பரியது என விழாவின் கலை இயக்குநர் குறிப்பிட்டார்.

77ஆவது முறையாக நடைபெறும் லக்கார்னோ திரைப்பட விழா இம் மாதம் 17ஆம் தேதி வரை நீடிக்கும்.

அதில் 225 திரைப்படங்கள் காண்பிக்கப்படும்.

ஆதாரம்: AFP

தொடர்புடைய செய்திகள்

+ - reset