நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் 30ஆவது கல்வி யாத்திரையில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பங்கேற்றனர்

பத்துமலை:

ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் கல்வி யாத்திரையில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பங்கேற்று பயன் பெற்றனர்.

கடந்த 42 ஆண்டுகளாக இந்திய மாணவர்களை பட்டதாரிகளாக உருவாக்கி வருகிறது ஸ்ரீ முருகன் கல்வி நிலையம்.

இதில் ஆயிரக்கணக்கான மாணவர்களை ஒருங்கிணைக்கும் நிகழ்வாக கல்வி யாத்திரை விளங்கி வருகிறது.

அவ்வகையில் 30ஆவது கல்வி யாத்திரை பத்துமலையில் சிறப்பான முறையில் நடைபெற்றது.

மழை என்ற சவாலைக் கடந்து ஆயிரக்கணக்கான மாணவர்களும் பெற்றோர்களும் இக்கல்வி யாத்திரையில் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

ஸ்ரீ முருன் கல்வி நிலையத்தின் தோற்றுநரும் தலைமை இயக்குருமான டான்ஸ்ரீ தம்பிராஜா சிறப்புரையாற்றி கல்வி யாத்திரையை தொடக்கி வைத்தார்.

ஓமத்திற்கு பின் அனைத்து மாணவர்களும் புனித நீரை ஏந்தி பத்துமலை மேல்குகைக்கு சென்று அபிஷேகம் செய்தனர். அதன் பின் மாணவர்களுக்கு தன்முனைப்பு உரை வழங்கப்பட்டது.

இதனிடையே  இந்திய மாணவர்களை சாதனையாளர்களாக உருவாக்குவது ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் முக்கிய இலக்காகும்.

இதன் ஓர் அங்கமாக இந்த கல்வி யாத்திரை நடைபெற்றது என்று அதன் இணை இயக்குநர் சுரேன் கந்தா கூறினார்.

கடவுளை ஒரு நாள் வழிபாட்டால் மாணவர்கள் அனைத்து பாடங்களிலும் ஏ எடுக்க முடியாது என்று எங்களுக்கு தெரியும்.

ஆனால் தொடர்ந்து படிக்க வேண்டும் என மாணவர்களை தூண்டுவது தான் இக்கல்வி யாத்திரையின் நோக்கமாகும்.

அதே வேளையில் கல்வி யாத்திரையை தொடர்ந்து மாணவர்களுக்கு தேர்வு வரை வழிகாட்டப்படும்.

இது தான் ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் அடுத்த நடவடிக்கை என்று அவர் கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset