நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சிறுமி ALBERTINE LEO கடத்தல் விவகாரம்: சந்தேக நபர் மீண்டும் காவதுறையினரால் கைது 

பெட்டாலிங் ஜெயா: 

ஆறு வயது சிறுமி ALBERTINE LEO கடத்தப்பட்ட விவகாரம் தொடர்பில் சந்தேக நபர் மீண்டும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டதாக ஜொகூர் மாநில காவல்துறை தலைவர் எம்.குமார் கூறினார். 

சிறார்கள் ஆபாசம் தொடர்பான விளையாட்டு பொருட்கள் யாவும் சந்தேக நபரின் வீட்டில் கண்டெடுக்கப்பட்டதால் இந்த நடவடிக்கையைப் போலிஸ் முன்னெடுத்தது. 

கூலாயில் உள்ள வீடொன்றி மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் இந்த பொருட்கள் சிக்கியதாக அவர் சொன்னார். 

2017ஆம் ஆண்டு சிறார்கள் சட்டத்தின் செக்‌ஷன் 10 பாலியல் குற்றத்தின் கீழ் சந்தேக நபர் கைது செய்யப்பட்டார். குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலான சிறை தண்டனை, அல்லது 10 ஆயிரம் ரிங்கிட் அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்படும். 

கடந்த ஜூலை 20ஆம் தேதி ஆறு வயது சிறுமி ALBERTINE LEO சிலாங்கூர் பத்தாங் காலியில் கண்டெடுக்கப்பட்டார். ஜொகூர் இஸ்கண்டார் புத்ரியில் காணாமல் போன அவர் சிலாங்கூரில் கண்டெடுக்கப்பட்டார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset