
செய்திகள் விளையாட்டு
சர்வதேச டென்னிஸ் போட்டியில் இருந்து ஓய்வை அறிவித்தார் இங்கிலாந்து வீரர் ஆன்டி முர்ரே
லண்டன்:
சர்வதேச டென்னிஸ் போட்டியில் இருந்து இங்கிலாந்து வீரர் ஆன்டி முர்ரே ஓய்வை அறிவித்தார்.
நடப்பு ஒலிம்பிக் போட்டியுடன் சர்வதேச டென்னிஸில் இருந்து ஓய்வுபெறுவதாக ஆன்டி முர்ரே அறிவித்துள்ளார்.
37 வயதாகும் பிரிட்டனைச் சேர்ந்த ஆன்டி முர்ரே இரண்டு முறை (2012, 2016) ஒலிம்பிக்கில் தங்கம் வென்றுள்ளார்.
2012இல் கலப்பு இரட்டையர் பிரிவில் வெள்ளியும் வென்றுள்ளார். விம்பிள்டன் போட்டியில் 2013, 2016 ஆண்டுகளிலும் 2012 அமெரிக்க ஓபன் தொடரிலும் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
அறுவைச் சிகிச்சை காரணமாக ஆடவர் ஒற்றையர் பிரிவில் இருந்து விலகிய ஆன்டி முர்ரே கலப்பு இரட்டையர் பிரிவில் மட்டுமே கலந்து கொண்டார்.
தற்போது பாரி8ஸ் ஒலிம்பிக் ஆடவர் இரட்டையர் காலிறுதிப் போட்டியில் டான் இவான்ஸ் உடன் சேர்ந்து டெய்லர், டாமி பால் இணையுடன் மோதினார்.
இதில் 2-6, 4-6 என செட்களில் ஆன்டி முர்ரே இணை தோல்வியுற்றது.
இதனைத் தொடர்ந்து தனது எக்ஸ் பக்கத்தில்,இனிமேல் டென்னிஸை விரும்பப்போவதில்லை எனக் கூறியுள்ளார். மேலும் தனது பயோவில் டென்னிஸ் விளையாடினேன் எனவும் மாற்றியுள்ளார்.
பார்வையாளர்களிடமிருந்து பலத்த கரகோஷம் கிடைத்தது. மக்களுக்கு நன்றி தெரிவித்து கையசைக்கும்போது ஆன்டி முர்ரேவின் கண்களில் கண்ணீர் கசிந்தது.
தோல்விக்குப் பிறகு இது சிறப்பான முடிவில்லை. பதக்கம் வென்றிருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஆனால் நான் சிறப்பாகவே உணர்கிறேன்.
போட்டி முடிந்த விதம் எனக்கு மகிழ்ச்சியே. ஒலிம்பிக்கில் பங்கேற்று எனது விருப்பப்படியே முடிந்தது மகிழ்ச்சி.
ஏனெனில் கடைசி சில வருடங்களில் எதுவும் நிரந்தரமாக இருக்கவில்லை. இவ்வாறு ஆன்டி முர்ரே தெரிவித்துள்ளார்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
April 25, 2025, 9:01 am
மெஸ்ஸியைப் பார்க்க குவிந்த ரசிகர்களால் வரலாற்றுச் சாதனை
April 25, 2025, 8:53 am
லா லீகா கால்பந்து போட்டி: அட்லாட்டிகோ மாட்ரிட் வெற்றி
April 24, 2025, 8:43 am
லா லீகா கால்பந்து போட்டி: ரியல்மாட்ரிட் வெற்றி
April 24, 2025, 8:38 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: அர்செனல் சமநிலை
April 23, 2025, 5:10 pm
46 ஆவது ஆண்டாக பேராக் இந்திய பூப்பந்து மன்றத்தின் போட்டி
April 23, 2025, 8:37 am
சவூதி புரோ லீக் கிண்ணம்: அல் நசர் அணி வெற்றி
April 23, 2025, 8:34 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் சிட்டி வெற்றி
April 22, 2025, 9:55 am
சவூதி புரோ லீக் கிண்ணம்: அல் ஹிலால் சமநிலை
April 22, 2025, 9:52 am