நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

பாரிஸ் ஒலிம்பிக் 2024: கால்பந்துப் போட்டி - அர்ஜெண்டினா வெளியேறியது

பாரிஸ்:

ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் ஆண்களுக்கான கால்பந்துப் பிரிவில்  அர்ஜெண்டினா அணியினர் தோல்வி கண்டு வெளியேறினர்.

மாட்முட் அரங்கில் நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் அர்ஜெண்டினா அணியினர் பிரான்ஸ் அணியை சந்தித்து விளையாடினர்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் அர்ஜெண்டினா அணியினர் 0-1  என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் அணியிடம் தோல்வி கண்டனர்.

இந்த தோல்வியை தொடர்ந்து அர்ஜெண்டினா அணியினர் ஒலிக்பிக் போட்டியில் இருந்து வெளியேறினர்.

வெற்றி பெற்ற பிரான்ஸ் அணியினர் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினர்.

மற்ற ஆட்டங்களில் வெற்றி பெற்ற ஸ்பெயின், மொராக்கோ, எகிப்து ஆகிய அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset