நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தியோ பெங் ஹாக்கின் மரண விசாரணையை மீண்டும் தொடங்க அரசாங்கம் ஒப்புதல்: பிரதமர்

புத்ராஜெயா:

தியோ பெங் ஹாக்கின் மரண விசாரணையை  மீண்டும் தொடங்க அரசாங்கம் ஒப்புதல் வழங்கியுள்ளது.

பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை தெரிவித்தார்.

கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கு முன் தியோ பெங் ஹாக் மரணமடைந்தார்.

அவரின் மரண விசாரணையை மீண்டும் தொடங்க வேண்டும் என்று அவரின் குடும்பத்தார் வலியுறுத்தி வந்தனர்.

இதன் அடிப்படையில் பிரதமரையும் நாங்கள் சந்திக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.

இந்நிலையில் பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார், மரணமடைந்த தியோ பெங் ஹாக்கின் குடும்பத்தாரை சந்தித்தார்.

இச் சந்திப்புக்கு பின் பிரதமர் கூறியதாவது,

15 ஆண்டுகளுக்கு முன்பு, தியோ பெங் ஹாக்கின் மரணம் தொடர்பான விசாரணை ஆவணங்களை மீண்டும் திறக்க அரசாங்கம் ஒப்புதல் வழங்கியுள்ளது.

இதற்காக போலிஸ் படையிடமும் வலியுறுத்தப்படும்.

மேலும் விசாரணை வெளிப்படையாகவும், குறுக்கீடு இல்லாமல் மேற்கொள்ளப்படும் என்றும், 

குறிப்பாக செப்டம்பர் 5, 2014 அன்று வழக்கு தொடர்பான மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் கருத்துக்களை கணக்கில் எடுத்துக்கொள்வதாக அரசாங்கம் உறுதியளித்ததாக அன்வார் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset