நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

ஜாதிவாரி கணக்கெடுப்பை கேட்கும் ராகுலின் ஜாதி என்ன?: பாஜக எம்பி சர்ச்சைக்குரிய கேள்வி

புது டெல்லி: 

ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்தக் கோரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் ஜாதி என்ன என்று பாஜக எம்.பி. அனுராக் தாக்கூர் கேட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

ஜாதியை குறிப்பிட்டு தன்னை அவமானப்படுத்தியதாக  ராகுல் கூறியுள்ளார். 

இதற்கு அனுராக் தாக்கூரை மன்னிப்பு கோர வலியுறுத்த மாட்டேன் என்று ராகுல் பெருந்தன்மையுடன் கூறினார்.

இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதால் மக்களவை சபாநாயகர் இதை அவை குறிப்பில் இருந்து நீக்கினார்.

இதனிடையே, ராகுலின் ஜாதியை குறிப்பிட்டு விமர்சித்த அனுராக் தாக்கூரின் பேச்சை தனது பக்கத்தில் பகிர்ந்த பிரதமர் மோடி அவரை பாராட்டினார்.

அவை குறிப்பில் இருந்து நீக்கப்பட்டதை பிரதமர் மோடி எவ்வாறு பகிர முடியும் என்று கேள்வி எழுப்பி காங்கிரஸ் பிரதமர் மோடி மீது மக்களவையில் உரிமை மீறல் நோட்டீஸ் அளித்துள்ளது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset