
செய்திகள் வணிகம்
ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று முதல் பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பு
துபாய்:
ஐக்கிய அரபு அமீரகத்தின் எரிபொருள் விலை நிர்ணயிக்கும் குழுவானது ஆகஸ்ட் மாதத்திற்கான பெட்ரோல், டீசல் விலையை அறிவித்துள்ளது.
ஜூலை மாதம் எரிபொருள் விலையானது குறைக்கப்பட்டிருந்த நிலையில் தற்பொழுது ஆகஸ்ட் மாதத்தில் எரிபொருள் விலையானது சற்று உயர்த்தப்பட்டுள்ளது.
எரிபொருள் குழுவின் ஆகஸ்ட் மாத விலைப்பட்டியலின்படி, ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல், Super 98 வகை பெட்ரோல் விலையானது ஒரு லிட்டருக்கு 3.05 திர்ஹமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த வகை பெட்ரோலின் விலையானது ஜூன் மாதத்தில் 2.99 திர்ஹமாக இருந்தது.
அடுத்ததாக ஸ்பெஷல் 95 வகையை சார்ந்த பெட்ரோல் விலையானது தற்போதைய அறிவிப்பின்படி, ஒரு லிட்டருக்கு 2.93 திர்ஹமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த வகை பெட்ரோலின் விலை ஜூலை மாதம் 2.88 திர்ஹமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
மூன்றாவது வகை பெட்ரோலான இ-பிளஸ் 91 பெட்ரோல் விலையானது தற்போது ஒரு லிட்டருக்கு 2.86 திர்ஹமாக உயர்த்தப்பட்டுள்ளது. இது ஜூலை மாதத்தில் 2.80 திர்ஹமாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
அதே சமயம் ஜூலை மாதத்தில் ஒரு லிட்டருக்கு 2.89 திர்ஹமாக விற்பனை செய்யப்பட்டு வந்த டீசல், ஆகஸ்ட் மாத விலை பட்டியலில் 2.95 திர்ஹமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
ஆதாரம்: கலீஜ் டைம்ஸ்
தொடர்புடைய செய்திகள்
July 12, 2025, 2:16 pm
மும்பையில் அமைகிறது முதல் டெஸ்லா ஷோரூம்
July 6, 2025, 6:43 am
பாகிஸ்தானை விட்டு செல்லும் மைக்ரோசாஃப்ட்
July 4, 2025, 6:23 pm
மினிமம் பேலன்ஸ் இல்லையென்றால் அபராதம் இல்லை: இரு வங்கிகள் அறிவிப்பு
July 1, 2025, 12:28 pm
கடந்த 9 மாதங்களில் இல்லாத அளவுக்கு ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு
June 23, 2025, 8:22 pm
ஈரான் இஸ்ரேல் போரினால் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் தொடர்ந்து சரிவு
June 23, 2025, 10:51 am
உலகச் சந்தையில் பதற்றம்: மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு வலுவடைந்தது
June 16, 2025, 4:21 pm