செய்திகள் கலைகள்
தனுஷுக்கு எதிரான தீர்மானம்: அவசரமாக கூடும் தயாரிப்பாளர் சங்க செயற்குழு
கோடம்பாக்கம்:
தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் சமீபத்தில் நடத்திய கூட்டுக் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில், ஆக.16 முதல் புதிய படங்கள் தொடங்குவதை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் நவ.1 முதல் தமிழ் சினிமாவின் அனைத்து விதமான படப்பிடிப்பு சம்பந்தப்பட்ட வேலைகளும் நிறுத்தப் படுவதாகவும் கூறப்பட்டு இருந்தது.
மேலும் நடிகர் தனுஷுக்கு எதிராகவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. “தனுஷ், பல தயாரிப்பாளர்களிடம் அட்வான்ஸ் பெற்றிருப்பதால் இனிவரும் காலங்களில் தயாரிப்பாளர்கள், தனுஷ் நடிக்கும் புதிய படங்களின் பணிகளை துவங்கும் முன் சங்கத்தை கலந்தாலோசிக்க வேண்டும்” என்று அந்த தீர்மானத்தில் கூறப்பட்டிருந்தது.
இதையடுத்து, நவ.1 முதல் தமிழ் சினிமாவின் அனைத்து பணிகளையும் நிறுத்தப்போவதாக அறிவித்தது தன்னிச்சையான முடிவு என்று நடிகர் சங்கம் கண்டனம் தெரிவித்தது. தனுஷ் குறித்த தீர்மானம் தொடர்பான தகவல் அதிர்ச்சியும், வருத்தமும் அளிப்பதாகவும் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் இருந்து தனுஷ் மீது எந்த புகாரும் அளிக்கப்படவில்லை என்றும் நடிகர் சங்கம் கூறியது.
இது சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து தயாரிப்பாளர் சங்க செயற்குழு இன்று அவசரமாகக் கூடுகிறது. இதில் சினிமா ஸ்டிரைக், தனுஷ் விவகாரம், நடிகர் சங்கம் தெரிவித்த கண்டனம் உள்ளிட்ட விஷயங்கள் பேசப்படும் என்று இந்து தமிழ் திசை ஊடகம் கூறுகிறது.
தயாரிப்பாளர் சங்கத்தில் எடுக்கப்படும் முடிவை அடுத்து நடிகர் சங்கத்தின் செயற்குழுவும் கூட இருக்கிறது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
January 26, 2026, 6:53 pm
மலையாளத் திரைப்படமான Patriot வெளியீட்டு நாள் அறிவிப்பு
January 20, 2026, 12:24 pm
Gegar Vaganza பாட்டுத்திறன் போட்டியில் சிங்கப்பூர்ப் பாடகர் இஸ்கண்டார் இஸ்மாயில் வாகை சூடினார்
January 19, 2026, 5:10 pm
ரஹ்மான் இந்தியாவின் நவீன அடையாளங்களின் ஒருவர்: அவரை குறை கூறுபவர்கள் அவர் இடத்தை நெருங்க முடியாது
January 12, 2026, 3:10 pm
என் படத்திற்கு சென்சார் போர்ட் 48 கட்டுகள் கொடுத்தது: மனம் திறந்த நடிகர் ஜீவா
January 7, 2026, 11:32 pm
மலேசியாவில் ஜனநாயகன் திரைப்படத்தின் வெளியீடு ஒத்திவைப்பு
January 7, 2026, 10:29 pm
‘ஜனநாயகன்’ வெளியீட்டில் சிக்கல்: தணிக்கை வழக்கில் உயர் நீதிமன்ற தீர்ப்பு எப்போது?
January 2, 2026, 5:10 pm
சிவ கார்த்திகேயன் நடிக்கும் பராசக்தி திரைப்படத்துக்கு தடை இல்லை: சென்னை உயர்நீதிமன்றம்
January 2, 2026, 3:27 pm
தெலுங்குப் படத்துக்கு மட்டும் புரமோஷன் செய்யும் நயன்தாரா? வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்
December 31, 2025, 11:48 am
