நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

ஹமாஸ் தலைவரை படுகொலை செய்தவர்களை பழிதீர்ப்போம்: ஈரான் தலைவர் சூளுரை

டெஹ்ரான்:

ஹமாஸ் தலைவர் படுகொலை செய்யப்பட்டதற்கு இஸ்ரேலை பழிதீர்ப்போம் என ஈரான் தலைவர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

ஈரானில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஹமாஸ் இயக்கத் தலைவர் இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்டார்.

இதற்கு எதிராக பதிலடி கொடுப்போம் என அந்த அமைப்பின் உறுப்பினர் ஒருவர் சூளுரைத்தார்.

இந்த நிலையில், ஈரான் உயர் தலைவர் அயத்துல்லா அலி காமேனி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 

அதில், இஸ்மாயில் ஹனியே எங்கள் அன்பிற்குரிய விருந்தாளியாக இருந்தார். 

டெஹ்ரானில் அவர் படுகொலை செய்யப்பட்ட நிலையில், இஸ்ரேல் தனக்கென ஒரு கடுமையான தண்டனையை தயார் செய்து கொண்டுள்ளது. 

இஸ்ரேலை பழிவாங்குவது ஈரானின் கடமை என்று நாங்கள் கருதுகிறோம் என தெரிவித்துள்ளார்.

ஹனியேயை கொலை செய்தது யார் என்பது குறித்து அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியாகாத நிலையில், இஸ்ரேல் தான் இந்த படுகொலையை செய்ததாக ஈரான், துருக்கி, கத்தார் போன்ற நாடுகளும் இஸ்ரேலை குற்றம்சாட்டி வருகின்றன.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset