
செய்திகள் வணிகம்
முதல் காலாண்டில் கொழும்பு துறைமுகத்தின் வருமானம் 50 மில்லியன் டாலர்களைத் தாண்டியது
கொழும்பு:
முதல் காலாண்டில் கொழும்பு துறைமுகத்தின் வருமானம் 50 மில்லியன் டொலர்களை தாண்டி உள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு துறைமுகம் இவ்வருடம் சிறந்த வளர்ச்சி விகிதத்தைப் பதிவு செய்து அதன் செயற்பாட்டுச் செயற்பாட்டில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளதாக துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து, விமானப் போக்குவரத்து அமைச்சின் செயலாளர் கே. டி. எஸ்.ருவன்சந்திர கூறுகிறார்.
இந்த வருடத்தின் முதல் காலாண்டில் கொழும்பு துறைமுகத்திற்கு 50 மில்லியன் அமெரிக்க டாலர் வருமானம் கிடைத்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே கே.டி.எஸ். ருவன்சந்திர குறிப்பிட்டார்.
இதேவேளை, 2023 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது இந்த வருடம் விமானப் போக்குவரத்து நடவடிக்கைகள் 25% முன்னேற்றத்தை பதிவு செய்துள்ளதாக துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சின் செயலாளர் கே.டி.எஸ். ருவன்சந்திர தெரிவித்தார்.
- நிஹார் தய்யூப்
தொடர்புடைய செய்திகள்
July 12, 2025, 2:16 pm
மும்பையில் அமைகிறது முதல் டெஸ்லா ஷோரூம்
July 6, 2025, 6:43 am
பாகிஸ்தானை விட்டு செல்லும் மைக்ரோசாஃப்ட்
July 4, 2025, 6:23 pm
மினிமம் பேலன்ஸ் இல்லையென்றால் அபராதம் இல்லை: இரு வங்கிகள் அறிவிப்பு
July 1, 2025, 12:28 pm
கடந்த 9 மாதங்களில் இல்லாத அளவுக்கு ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு
June 23, 2025, 8:22 pm
ஈரான் இஸ்ரேல் போரினால் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் தொடர்ந்து சரிவு
June 23, 2025, 10:51 am
உலகச் சந்தையில் பதற்றம்: மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு வலுவடைந்தது
June 16, 2025, 4:21 pm