
செய்திகள் இந்தியா
கடும் எதிர்ப்புக்கு பிறகு பணிந்தது இந்திய அரசு: வெளிநாடு செல்லும் அனைவரும் இனி வரி அனுமதிச் சான்றிதழ் பெறத் தேவையில்லை
புதுடெல்லி:
வெளிநாடு செல்லும் அனைவரும் வரி அனுமதிச் சான்றிதழ் பெற தேவையில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
வெளிநாடு செல்லும் அனைவரும் வரி அனுமதிச் சான்றிதழ் பெறுவது கட்டாயம் என பட்ஜெட்டில் மத்திய அரசு அறிவித்ததற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியது.
இதனைத் தொடர்ந்து, நிதி முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மற்றும் வரி பாக்கி அதிக அளவில் வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே வரி அனுமதிச் சான்றிதழ் தேவை என மத்திய அரசு நேற்று (ஜூலை 28) அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
’தற்போது கொண்டு வரப்பட்டுள்ளத் திருத்தத்தின்படி வெளிநாடு செல்லும் அனைவரும் வரி அனுமதிச் சான்றிதழ் பெறத் தேவையில்லை' என நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும், இந்த திருத்தத்தில் கருப்புப் பணச் சட்டம் 2015-ன் குறிப்புகள் சேர்க்கப்பட்டு, வெளிநாடு செல்லும் நபர்கள் வரி நிலுவைகளைச் செலுத்தி அனுமதிச் சான்றிதழ் பெற வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
வருமான வரித்துறையின் 2004 அறிக்கையின்படி, கடுமையான நிதி முறைகேடுகள் மற்றும் வருமான வரி, சொத்து வரிச் சட்டம் தொடர்பான வழக்குகளில் சம்பந்தப்பட்ட நபர் நேரடியாக ஆஜராகவோ வரியைச் செலுத்தவோ தேவையிருக்கும் பட்சத்தில் அல்லது ஒரு நபரின் நேரடி வரி நிலுவை ரூ.10 லட்சத்திற்கு அதிகமாக இருக்கும் பட்சத்தில் அவை நிறுத்தி வைக்கப்படாமல் இருப்பது போன்ற வழக்குகளில் மட்டுமே வரி அனுமதிச் சான்றிதழ் வாங்க வேண்டும் என நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
காரணங்களைப் பதிவு செய்த பின்னரே குறிப்பிட்ட நபரிடம் சான்றிதழ் பெறுவது குறித்து கேட்க முடியும் எனவும் நிதித்துறை கூறியுள்ளது.
ஒன்றிய அரசின் அறிவிப்புக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியதால் இப்போது அது பணிந்துள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
May 22, 2025, 9:53 am
கேஎல்ஐஏவிலிருந்து கடத்தப்பட்ட 3,000 ஆமைகளுடன் 2 இந்திய நாட்டவர்கள் பெங்களூருவில் கைது
May 21, 2025, 3:56 pm
மே 21 1991 : காங்கிரஸ் கட்சியின் தீபச் சுடர் அணைந்த கருப்பு தினம்
May 18, 2025, 7:23 pm
ஹைதரபாத்தின் சார்மினார் பகுதியில் கடுமையான தீ விபத்து: 17 பேர் பலி
May 16, 2025, 1:34 am
ட்ரம்ப்பை விமர்சித்து பதிந்த கருத்தை அவசரமாக நீக்கிய நடிகை கங்கனா
May 14, 2025, 2:50 pm
இந்திய உச்சநீதிமன்றத்தின் 52ஆவது தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாய் பதவியேற்றார்
May 13, 2025, 8:26 am
பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலை இந்தியா பொறுத்துக் கொள்ளாது: இந்தியப் பிரதமர் மோடி
May 11, 2025, 1:23 am