செய்திகள் தொழில்நுட்பம்
ரிலையன்ஸ், ஜியோ, ஏர்டெல், வோடபோன்-ஐடியாவிலிருந்து பிஎஸ்என்எல்லுக்கு மாறத் தொடங்கியுள்ள பொதுமக்கள்: அதிரடி விலை குறைப்பால் கவனம் ஈர்க்கும் BSNL
சென்னை:
இந்தியாவில் டெலிகாம் என்னும் தொலை தொடர்புத்துறையில், ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல், தனியார் நிறுவனங்களாக ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல், வோடபோன்-ஐடியா ஆகியவை உள்ளன. இவற்றில் தனியார் நிறுவனங்கள், 4ஜி, 5ஜி சேவையை வழங்கி வருகிறது. அரசு நிறுவனமான பிஎஸ்என்எல், நகரப்பகுதிகளுக்கு 4ஜி சேவையை வழங்குகிறது.
ஊரக பகுதிகளுக்கு 4ஜி சேவை வழங்குவதற்கான நடவடிக்கையில், தீவிரமாக இறங்கியுள்ளது. இதற்காக கோபுரங்கள் (டவர்கள்) அமைக்கும் பணியை தீவிரமாக மேற்கொண்டுள்ளது.
கடந்த மாதத்தில் தனியார் செல்போன் நிறுவனங்கள், ரீசார்ஜ் கட்டணங்களை 12 முதல் 25 சதவீதம் வரை அதிரடியாக உயர்த்தியது. இதனால், அச்சேவையை பயன்படுத்தி வரும் பொதுமக்கள் பெரிதும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.
அதே வேளையில், பிஎஸ்என்எல் நிறுவனம், 4ஜி சேவைக்கான ரீசார்ஜ் கட்டணத்தை குறைத்து அதிரடியாக அறிவிப்பு வெளியிட்டது. குறிப்பாக ₹153க்கு 28 நாட்களுக்கு தினமும் 1.5 ஜிபியும், ₹365க்கு 60 நாட்களுக்கு தினமும் 2 ஜிபியும், ₹429க்கு 81 நாட்களுக்கு தினமும் 1 ஜிபியும், ₹485க்கு 90 நாட்களுக்கு தினமும் 1.5 ஜிபியும், ₹666க்கு 134 நாட்களுக்கு தினமும் 1.5 ஜிபியும், ₹997க்கு 180 நாட்களுக்கு தினமும் 3 ஜிபியும் என குறைந்த விலையில் பல்வேறு ரீசார்ஜ் திட்டங்களை அறிவித்துள்ளது.
தனியார் நிறுவனங்களில் கட்டணம் உயர்ந்த நிலையில், பிஎஸ்என்எல் குறைத்திருப்பதால், நகர பகுதியில் வசிக்கும் மக்கள், பிஎஸ்என்எல் சேவைக்கு மாறத் தொடங்கியுள்ளனர். நாடு முழுவதும் நடப்பு மாதத்தில், 30 லட்சம் புதிய வாடிக்கையாளர்கள் பிஎஸ்என்எல் சேவைக்கு மாறி வந்துள்ளனர். மொபைல் எண்ணை மாற்றாமல், அதே எண்ணில் பிஎஸ்என்எல் 4ஜி சேவைக்கு மாறியுள்ளனர்.
இதில், தமிழ்நாட்டில் கடந்த 28 நாளில் 2 லட்சம் பேர் மாறியிருக்கிறார்கள். தற்போது, சென்னை, மதுரை, திருச்சி, சேலம், கோவை, திருப்பூர், ஈரோடு என முக்கிய நகரங்களில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகங்களில் மக்கள் கூட்டம் அதிகளவு உள்ளது.
பிஎஸ்என்எல் மொபைல் சேவைக்கு மாறி வருவதற்காக விண்ணப்பிக்கின்றனர். மேலும், புதிய சிம்கார்டுகளையும் பெற்று வருகின்றனர். இதில், சென்னை, சேலம், கோவை நகரங்களில் தலா 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர், மொபைல் எண்ணை மாற்றாமல் பிஎஸ்என்எல் 4ஜி சேவைக்கு மாறி வந்துள்ளனர்.
மோடி அரசு வழக்கம்போல் பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்கும் முயற்சியில் இறங்கியபோது பிஎஸ்என்எல் தொழில்சங்கங்களும் அதன் பணியாளர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த நிறுவனத்தை விற்க முடியாமல் தள்ளிப்போனதாக கூறப்படுகிறது.
ஏற்கெனவே லாபகரமாக இயங்கி வந்த எல் ஐ சி காப்பீட்டு நிறுவனத்திலிருந்த அரசின் பங்குகளை மோடி அரசு விற்றது குறிப்பிடத்தக்கது.
இந்த சூழலில் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் சேவை குறைவான விலையில் மக்களுக்கு வழங்கிவருவதால் ஆதரவு கூடி வருகின்றது.
- ஃபிதா
தொடர்புடைய செய்திகள்
November 20, 2025, 6:41 pm
AI-ஐக் கண்மூடித்தனமாக நம்ப வேண்டாம்: சுந்தர் பிச்சை எச்சரிக்கை
November 5, 2025, 5:43 pm
இந்தியாவில் இனி ChatGPT Go சேவை இலவசம்: மாதக் கட்டணம் ரத்து
October 29, 2025, 7:07 am
விக்கிபீடியாவுக்கு போட்டியாக Grokipedia-வை அறிமுகம் செய்தார் எலான் மஸ்க்
October 17, 2025, 3:18 pm
கரடிகள் நடமாட்டத்தைக் கண்டுபிடிக்க AI செயலி
October 15, 2025, 10:43 pm
ஆந்திராவில் 15 பில்லியன் டாலர் முதலீட்டில் AI தரவு மையம் அமைக்கிறது கூகுள்
September 29, 2025, 10:49 pm
சிங்கப்பூரில் Chatbot மூலம் இனி காவல் நிலையத்தில் சுலபமாகப் புகார் அளிக்கலாம்
September 26, 2025, 3:05 pm
ரயிலில் இருந்து அக்னி பிரைம் ஏவுகணை ஏவி சாதனை
September 8, 2025, 9:14 pm
சைபர் செக்கியூரிட்டி மலேசியாவின் முதல் வாகன தடயவியல் ஆய்வகத்தை கோபிந்த் சிங் தொடக்கி வைத்தார்
August 25, 2025, 8:03 pm
