நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

இத்தாலி லீக்கில் இணைகின்றார் டேவிட் டி கியா?

ரோம்: 

மென்செஸ்டர் யுனைடெட் அணியின் முன்னாள் கோல் காவலரான டேவிட் டி கியா, இத்தாலி கால்பந்து அணியில் இணையக்கூடுமென செய்திகள் கசிகின்றன.

எரிக் டெங் ஹெக் மென்செஸ்டர் யுனைடெட் அணியின் நிர்வாகியாகத் தொடரும் நிலையில், கால்பந்து இயக்குநராக ஜான் ஜான் முர்டோஃப் இருக்கும் இந்நிலையில் தாம் மீண்டும் அவ்வணியில் இணைவற்கு சாத்தியமில்லை என்பதை அறிந்து டி கியா இம்முடிவை எடுத்துள்ளதாகத் தெரிகின்றது.

கடந்த பருவத்தில் மென்செஸ்டர் யுனைடெட் மோசமான அடைவுநிலையை வெளிப்படுத்தியது.

இதன் காரணமான எரிக் டெங் ஹெக் அவ்வணியிலிருந்து நீக்கப்படும் சாத்தியம் இருந்தது.

ஆனால் இங்கிலாந்து எப்ஏ கிண்ணத்தை வென்றதால், அவர் அணியில் நிர்வாகியாகத் தொடர்ந்து நீடிப்பார் என நிர்வாகம் முடிவு செய்தது.

கடந்த பருவம் முழுவதும் எந்த அணியிலும் இணையமல் இருந்த டி கியா, தற்போது புதிய அணியில் இணைய இணக்கம் தெரிவிப்பதாகத் தெரிகின்றது.

இந்நிலையில் இத்தாலியின் ஜெனோவா அணியில் இணைய அவர் இணக்கம் தெரிவித்துள்ளார்.

தற்போது அந்த அணியில் முடிவிற்காக அவர் காத்திருப்பதாக டெய்லி மெயில் செய்தி வெளியிட்டுள்ளது.

- தயாளன் சண்முகம்

 

தொடர்புடைய செய்திகள்

+ - reset