
செய்திகள் கலைகள்
ஏஆர் ரஹ்மான் இசை நிகழ்ச்சியை முன்னிட்டு எல்ஆர்டி ரயில் சேவை அதிகாலை 1 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது
கோலாலம்பூர்:
ஏஆர் ரஹ்மான் இசை நிகழ்ச்சியை முன்னிட்டு புக்கில் ஜாலிலுக்கான எல்ஆர்டி ரயில் சேவை அதிகாலை 1 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
பிரசரானா மலேசியா பெர்ஹாட் நிறுவனம் ஓர் அறிக்கையின் வாயிலாக இதனை உறுதிப்படுத்தியது.
உலக புகழ் பெற்ற இசைப்புயல் ஏஆர் ரஹ்மானின் இசை நிகழ்ச்சி இன்று இரவு 8 மணிக்கு புக்கிட் ஜலில் தேசிய விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ளது.
கிட்டத்தட்ட 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் இன்று புக்கிட் ஜலில் அரங்கில் கூடவுள்ளனர்.
இந்த இசை நிகழ்ச்சிக்கு வரும் ரசிகர்களின் வசதிக்காக எல்ஆர்டி ரயில் சேவை நாளை அதிகாலை 1 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது
வாடிக்கையாளர்கள் தங்கள் இறுதி இலக்கை நோக்கி தங்கள் பயணத்தைத் தொடர அனுமதிக்க அனைத்து நிலையங்களின் செயல்பாடும் நீட்டிக்கப்படும் என்று பிரசரனா கூறியது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 10, 2025, 11:04 am
பாக்கிஸ்தான் நடிகை சடலம் அழுகிய நிலையில் மீட்பு
July 8, 2025, 5:31 pm
பிரபல மலையாள நடிகர் உன்னி முகுந்தனின் இன்ஸ்டாகிரம் கணக்கு முடக்கம்
July 6, 2025, 12:51 pm
ரசிகர்களின் மனதைக் கிரங்கடித்த HEARTS OF HARRIS - THE FINAL ENCORE இசைநிகழ்ச்சி
July 3, 2025, 10:23 pm
முழங்காலிட்டு பத்திரிகையைப் பெற்று கொண்ட விஜய் சேதுபதி
July 2, 2025, 10:41 am
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் நடித்த இதயக்கனி படம் டிஜிட்டலில் மீண்டும் ரிலீஸ்
June 29, 2025, 5:45 pm