நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

பாரிஸ் ஒலிம்பிக் போட்டி அதிகாரப்பூர்வமாக தொடங்கியது

பாரிஸ்:

பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டு திருவிழா கோலாகலமாக துவங்கியது. பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்தார்.

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் 33ஆவது ஒலிம்பிக் போட்டி நேற்று நள்ளிரவு தொடங்கி ஆக.11 வரை நடக்க உள்ளது.

நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும். இதன் துவக்க விழா மைதானத்தில் நடப்பது வழக்கம்.

இந்த ஒலிம்பிக்கில் 32 விளையாட்டு பிரிவில் 329 போட்டிகள் நடக்கிறது.

முதன்முறையாக பாரிசின் சென் நதியில் துவக்க விழா ஆஸ்டர்லிட்ஸ் பாலத்தில் இருந்து துவங்கியது.

100 படகுகளில் 205 நாடுகளை சேர்ந்த 10,500 வீரர், வீராங்கனைகள் சென்றனர்.

பாரிசின் அழகை ரசித்தவாறு 6 கி.மீ., துாரத்திற்கு படகில் பயணிக்கலாம். நதியின் இரு புறமும் அமர்ந்து, லட்சக்கணக்கான மக்கள் துவக்க விழாவை காண குவிந்தனர்.

பாப் பாடகர்களான செலின் டியான், லேடி ககா ஆகியோர் நிகழ்ச்சி அனைவரையும் கவர்ந்தது. பின் நடைபெற்ற அணிவகுப்பில் நம் மூவர்ணக்கொடியை சிந்து, சரத் கமல் ஏந்தி வந்தனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset