நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் வணிகம்

By
|
பகிர்

கேஎல் லாருட் ஈய மண் நிறுவனத்திற்கு நான்கு நட்சத்திர தர அந்தஸ்து: ஓம்ஸ் தியாகராஜன்

பத்தாங் பெர்ஜூந்தாய்:

கேஎல் லாருட் ஈய மண் நிறுவனத்திற்கு கனிம, புவியியல் துறையின் நான்கு நடசத்திர தர  அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.

இது இந்நிறுவனத்திற்கு கிடைத்த மிகப் பெரிய அங்கீகாரம் என்று அதன் தலைமை இயக்குநர் ஓம்ஸ் தியாகநாஜன் கூறினார்.

கேஎல் லாருட் நிறுவனம் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது.

கடந்த 5 ஆண்டுகளாக இந்த கனிம வளம் கொண்ட ஈய மண் எடுக்கும்  நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொண்டு வருகிறது.

கடந்த காலங்களில் இருந்த பிரச்சினைகள் அனைத்தும் களையப்பட்டு இப்போது இந்த நிறுவனம் சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறது.

இதன் அடிப்படையில் தான் இந்நிறுவனத்திற்கு இந்த 4 நட்சத்திர தர சான்றிதழ் கிடைத்துள்ளது.

இதை 5 நடசத்திரமாக மாற்ற வேண்டும் என்பது தான் எங்களின் இலக்காகும் என்று அவர் கூறினார்.

முன்னதாக பொருளாதார இயற்கை மேலாண்மைத் துறையின் துணை இயக்குநர் ஷவாத்தி யுஸ்ரா, கனிம, புவியியல் துறையின் தலைமை இயக்குநர் ரூஸ்லி தலைமையில் அத் துறைகளின் அதிகாரிகள் கேஎல் லாருட் நிறுவனத்திற்கு வருகைத் தந்தனர்.

இந்நிறுவனத்தின் செயல்பாடுகள், ஈய மண் எடுக்கும் முறைகளை அவர்கள் நேரடியாக பார்வையிட்டனர்.

இயற்கைக்கு பாதிப்பு இல்லாமலும் மண் தான் நமது வளம் என்ற அடிப்படையில் கேஎல் லாருட் நிறுவனத்தின் நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றன.

அதே வேளையில் அவ்விலாகாக்களின் வழிகாட்டியின் கீழ் தான் கேஎல் லாருட் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

மேலும் கேஎல் லாருட் நிறுவனத்தில் தகவல் மையம் ஒன்றையும் அமைக்க நாங்கள் திட்டமிட்டுள்ளோம்.

இது ஈய மண் சுரங்கம் குறித்த அனைத்து விளக்கங்களை தரும் மையமாக இது திகழும் என்று ஓம்ஸ் தியாகராஜன் கூறினார்.

இந்நிகழ்வில் கேஎல் லாருட் நிறுவனத்தின் இயக்குநர் டாக்டர் பழனீஸ்வரன், தலைமை செயல்முறை அதிகாரி டாக்டர் பத்மநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset