நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

பாரிஸ் ஒலிம்பிக் 2024: மலேசியாவின் முதல் தங்கபதக்க வேட்டை இன்று தொடங்குகிறது

பாரிஸ்:

2024அம் ஆண்டுக்கான பாரிஸ் ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் அதிகாரப்பூர்வமாக தொடங்கவுள்ள நிலையில் சில போட்டிகள் இன்று முதல் ஆரம்பமாகியுள்ளன.

இந்நிலையில், ஒலிம்பிக்கில் மலேசியாவின் முதல் தங்கபதக்க வேட்டை இன்று தொடங்குகிறது. மலேசியாவைப் பிரதிநிதித்து 26 வீரர்கள், வீராங்கனைகள் பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் களம் கண்டுள்ளனர்.

அவர்களில் 61 விழுக்காட்டினர் புதுமுகங்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாரிஸ் நகரில் உள்ள லெஸ் இன்வாலிடெஸ் கார்டனில் வில்வித்தை போட்டிக்கான தகுதி சுற்று இன்று தொடங்குகிறது.
மலேசியாவைப் பிரதிநிதித்து அரியானா நூர் டானியா களம் காண்கிறார். 

ஒலிம்பிக் போட்டி தொடரில் மலேசியா இதுவரை எட்டு வெள்ளி, ஐந்து வெண்கல பதக்கங்களை மட்டுமே வென்றுள்ளது. அதில் பூப்பந்து போட்டியில் மட்டும் மலேசியா அதிகளவில் பதக்கங்களைக் குவித்துள்ளது.

ஒலிம்பிக் விளையாட்டு போட்டியில் மலேசியா அதன் முதல் தங்கப்பதக்கத்தை வெல்லும் என்று ஒவ்வொரு மலேசியரும் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர்.

இந்த 2024ஆம் ஆண்டு பாரிஸ் ஒலிம்பிக் தொடர்பில் மலேசியா சிறந்த அடைவுநிலையைப் பதிவு செய்யும் என்று எதிர்பார்க்கலாம்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset