நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

இந்தியா- அமெரிக்க உறவுகள் வலுப்பெற்றுள்ளன: அதிபர் ஜோ பைடன்

வாஷிங்டன்:

இந்தியாவுடனான உறவு மேலும் வலுப்பெற்றுள்ளது என்று அதிபர் ஜோபைடன் அந்நாட்டு பிரதமர் மோடியுடன் மேற்கொண்ட சந்திப்பின்போது கூறினார்.

அமெரிக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டு அதிபர் ஜோ பைடனை வெள்ளிக்கிழமை வாஷிங்டனில் உள்ள அதிபரின் வெள்ளை மாளிகையில் சந்தித்துப் பேசினார்.

இந்த சந்திப்பின்போது, அமெரிக்க - இந்திய உறவு மேலும் உறுதியாகவும் நெருக்கமாகவும் திகழும் என்று அதிபர் பைடன் கூறினார்.

அதிபர் பைடனின் தலைமையில் இருநாட்டு நல்லுறவு முக்கிய பங்காற்றும் என்றும் இந்திய-அமெரிக்க நட்புறவு மேலும் உறுதியடைவதற்கான விதைகள் விதைக்கப்பட்டுள்ளன என்றும் பிரதமர் மோடி கூறினார்.

வெள்ளை மாளிகையில் நடைபெற்ற இந்த சந்திப்பில் கரோனாவுக்கு எதிரான நடவடிக்கைகள், பருவநிலை மாற்றம், பொருளாதார ஒத்துழைப்பு, ஆப்கானிஸ்தான் விவகாரம் என்பன உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் இரு நாடுகளிடையேயான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர்.

முன்னதாக, துணை அதிபர் கமலா ஹாரிஸை இந்திய பிரதமர் மோடி சந்தித்துப் பேசினார்.
சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது பிராந்திய விவகாரங்கள், சர்வதேச விவகாரங்கள், இருதரப்பு நல்லுறவை மேலும் வலுப்படுத்துவது உள்ளிட்டவை தொடர்பாக தலைவர்கள் இருவரும் விவாதித்தனர். இந்தியா-அமெரிக்கா இடையேயான நல்லுறவை மேம்படுத்தும் வகையில் துணை அதிபர் கமலா ஹாரிஸிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாக பிரதமர் மோடி சுட்டுரையில் பதிவிட்டார்.

PM Modi presents Kamala Harris, other world leaders with unique gifts from  Kashi - India News

ஆனால், கமலா ஹாரிஸ் மோடியுடனான சந்திப்பு குறித்து ட்விட்டரில் பதிவிடாதது சர்ச்சையை ஏற்படுத்தியது. அவருக்கு பிறகு சந்தித்த தலைவர்கள் குறித்த விவரங்களை அவர் பதிவிட்டிருந்தார்.

கமலா ஹாரிஸுடனான பேச்சுவார்த்தையின்போது, பாகிஸ்தானில் பயங்கரவாதக் குழுக்கள் செயல்படுவது தொடர்பான விவகாரத்தை துணை அதிபர் ஹாரிஸ் தாமாகவே எழுப்பியதாக இந்திய வெளியுறவுத் துறைச் செயலர் ஹர்ஷ்வர்தன் ஷ்ரிங்லா தில்லியில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இதனிடையே, துணை அதிபர் கமலா ஹாரிஸுக்கு பிரதமர் மோடி, வாரணாசியின் "குலாபி மீனாகாரி' வேலைப்பாட்டில் உருவாக்கப்பட்ட சதுரங்கக் காய்களை பரிசாக அளித்தார். 

தொடர்புடைய செய்திகள்

+ - reset