நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

தில்லியில் நீதிமன்றத்துக்குள் நுழைந்து கைதி சுட்டுக் கொலை: 2 பேரை போலீஸார் சுட்டனர்

 புது டெல்லி:

கிரிமினல் வழக்குகள் தொடர்புடைய பிரபல ரெளடி ஜிதேந்தர் கோகியை, எதிர்க்கோஷ்டியினர் தில்லி ரோஹிணி நீதிமன்றத்தில் நீதிபதியின் முன் சுட்டுக் கொன்றனர்.

அப்போது போலீஸாருக்கும், அவர்களுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் இரண்டு ரௌடிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இருவரும் வழக்குரைஞர் உடையில் நீதிமன்றத்துக்குள் நுழைந்து இந்தத் தாக்குதலை நடத்தியபோது நீதிமன்றத்தில் இருந்தவர்கள் சிதறி ஓடினர். இதில் பெண் வழக்குரைஞருக்கு காலில் குண்டு பாய்ந்ததாக சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் தெரிவித்தார்.

இந்த துப்பாக்கிச் சண்டை விடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது.

இதனால் தலைநகர் தில்லியின் பாதுகாப்பு கேள்விக்குறியாக மாறியுள்ளது.

நீதிமன்ற பாதுகாப்புப் பணியில் போலீஸார் அலட்சியமாக செயல்படுகிறார்கள் என்றும்
துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் ரோஹிணி நீதிமன்ற வளாகத்தில் அவ்வப்போது நடைபெற்றுவது வழக்கமானதுதான் என்றும் வழக்குரைஞர்கள் குற்றம்சாட்டினர்.

தொடர்புடைய செய்திகள்

+ - reset