நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தேசிய தின மாதம் கொண்டாட்ட அறிமுக விழா: இன்று சைபர்ஜெயாவில் நடைபெறுகிறது

கோலாலம்பூர்: 

2024ஆம் ஆண்டுக்கான தேசிய தின கொண்டாட்டம், ஜாலுர் கெமிலாங் கொடியை பறக்கவிடும் நிகழ்வையொட்டி இன்று தேசிய தின மாத கொண்டாட்ட அறிமுக விழா இன்று நடைபெறுகிறது. 

இன்று மாலை சைபர்ஜெயாவில் நடைபெறவிருக்கும் தேசிய தின மாத கொண்டாட்ட அறிமுக விழாவில் நாட்டு மக்கள் அனைவரும் கலந்துக்கொண்டு சிறப்பிக்குமாறு துணைப்பிரதமர் டத்தோஶ்ரீ ஃபாடில்லா யூசோஃப் கூறினார் 

நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் சுதந்திர தின உணர்வு இருக்க வேண்டும். அதுவே ஒரு நாட்டின் ஒற்றுமைக்கும் அமைதிக்கும் வித்திடும் என்று அவர் தெரிவித்தார். 

பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தேசிய தின மாதம் கொண்டாட்ட அறிமுக விழாவினை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைப்பார் என்று ஃபாடில்லா சொன்னார். 

நாட்டின் தேசிய தினம் அடுத்த மாதம் ஆகஸ்ட் 31ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset