நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இணையப் பகடிவதைக்கு இலக்காகி ஈஷா மரணம்: சட்ட ஆலோசனையை நாடும் குடும்பம்

கோலாலம்பூர்:

ஈஷா என்று பரவலாக அறியப்படும் சமூக ஊடகப் பிரபலமான ராஜேஸ்வரி அப்பாவுவின் தற்கொலை விசாரணை குறித்து அவரது குடும்பம் சட்ட ஆலோசனை பெறக் கோரிக்கை விடுத்துள்ளது.

அதைத் தொடர்ந்து மலேசியாவின் இணைய மிரட்டல் சட்டகளில் மாற்றங்கள் கொண்டுவருவதை அதிகாரிகள் பரிசீலிக்கின்றனர்.

30 வயது ராஜேஸ்வரி இம்மாதம் (ஜூலை 2024) 5ஆம் தேதி அவரது வீட்டில் மாண்டுகிடக்கக் காணப்பட்டார்.

அதற்கு முந்திய நாள் அவர் கோலாலம்பூரில் காவல்துறையிடம் புகாரளித்திருந்தார்.

பாலியல் துன்புறுத்தல், கொலை மிரட்டல் குறித்து அவர் புகார் கொடுத்திருந்தார்.

டிக் டாக் தளத்தில் தம்மை மிரட்டி கேலி செய்யும் இருவரின் பெயர்களை ராஜேஸ்வரி புகாரில் குறிப்பிட்டார்.

டிக்டாக் நேரடிக் காணொலியில் ஒருவர் தம்மைக் கடுஞ்சொற்களைக் கொண்டு மிரட்டியதாகவும் அவர் சொன்னார்.

போலிஸ் துறையிடம் புகார் கொடுக்கப்பட்ட பிறகு ஏன் உடனடி நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று ராஜேஸ்வரியின் குடும்பம் கேட்பதாக வழக்கறிஞர் கூறினார். விசாரணை முறையிலும் சந்தேகம் எழுந்துள்ளது.

ராஜேஸ்வரியின் திறன்பேசிகளைக் காவல்துறை துல்லிதமாக விசாரிக்கவில்லை என்றும் வழக்கறிஞர் ஹர்பால் சிங்  சொன்னார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset