செய்திகள் விளையாட்டு
52 மில்லியன் தொகையில் மென்செஸ்டர் யுனைடெட் அணியில் இணைந்தார் லெனி யொரோ
லண்டன்:
இங்கிலாந்தின் முன்னணி கால்பந்து அணியான மென்செஸ்டர் யுனைடெட் லில் அணியின் தற்காப்பு ஆட்டக்காரரான லெனி யொரோவை 52 மில்லியன் பவுன் தொகையில் ஒப்பந்தம் செய்துள்ளது.
தலைசிறந்த தற்காப்பு ஆட்டக்காரர்களின் யொரொவும் ஒருவர் என மென்செஸ்டர் யுனைடெட் அணியின் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
பிரான்ஸைப் பூர்வீகமாகக் கொண்ட அந்த 18 வயதான ஆட்டக்காரை ஸ்பெயின் ரியல் மாட்ரிட் அணியில் இணைவார் என பரவலாகப் பேசப்பட்ட நிலையில், மென்செஸ்டர் யுனைடெட் அணி அவருடனான ஒப்பந்தத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. 5 ஆண்டுகால ஒப்பந்தத்தில் அவர் கையெழுத்திட்டுள்ளார்.
16 வயதில் தமது கால்பந்து பயணத்தை தொடங்கிய யொரொ உலகின் தலைசிறந்த கால்பந்து அணியான மென்செஸ்டர் யுனைடெட் அணியில் இணைந்தது பெரும் மகிழ்ச்சி என குறிப்பிட்டார்.
மென்செஸ்டர் யுனைடெட் தற்காப்பு பகுதியை வலுப்பத்த யொரொவின் வருகை துணை புரியுமென அவ்வணியின் நிர்வாகி ஹெரிக் தெங் ஹெக் கூறியுள்ளார்.
- தயாளன் சண்முகம்
தொடர்புடைய செய்திகள்
September 18, 2026, 9:36 am
இந்தர்மியாமி அணிக்காக 100ஆவது கோல்: 48ஆவது கிண்ணத்தை வென்று லியோனல் மெஸ்ஸி உலக சாதனை
September 18, 2026, 9:34 am
இங்கிலாந்து கரபாவ் கிண்ணம்: மென்செஸ்டர் சிட்டி வெற்றி
September 16, 2026, 10:05 am
லா லீகா கால்பந்து போட்டி: ரியல்மாட்ரிட்டின் தலை தப்பியது
September 16, 2026, 10:03 am
இங்கிலாந்து கரபாவ் கிண்ணம்: அர்செனல் வெற்றி
September 15, 2026, 10:09 am
தேசிய ஒருமைப்பாடு ஓட்டம்; ஒற்றுமையை வலுப்படுத்தும்: சிவக்குமார்
September 15, 2026, 10:07 am
எப்ஏஎஸ் ஜூனியர் லீக் காலிறுதி சுற்றில் பெட்டாலிங் மாவட்ட கால்பந்து அணி
September 15, 2026, 9:45 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: லீட்ஸ் யுனைடெட் வெற்றி
September 15, 2026, 9:42 am
