நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சுங்கைபூலோவில் எஸ்பிஎம் தேர்வில் சிறப்பு தேர்ச்சிப் பெற்ற 159 மாணவர்களுக்கு ஊக்கத் தொகை: டத்தோ ரமணன் வழங்கினார்

சுங்கைபூலோ:

எஸ்பிஎம் தேர்வில் சிறப்பு தேர்ச்சிப் பெற்ற 159 மாணவர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கப்பட்டது.

சுங்கைபூலோ நாடாளுமன்ற உறுப்பினரும் தொழில் முனைவோர் மேம்பாடு கூட்டுறவு துணையமைச்சருமான டத்தோ ஆர். ரமணன் இத் தொகையை வழங்கினார்.

இந்த தொகுதியில் உள்ள மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என்ற நோக்கில் இந்த ஊக்கத் தொகை வழங்கப்பட்டு வருகிறது.

தொழில் முனைவோர் மேம்பாடு கூட்டுறவுத் துறை அமைச்சு, பேங்க் ரக்யாட் அற்ல்வாரியத்தின் ஒத்துழைப்புடன் இந்த ஊக்கத் தொகையை மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.

எஸ்பிஎம் தேர்வில் 7ஏக்குப் மேல் எடுத்த 159 மாணவர்களுக்கு இந்த ஊக்கத் தொகை வழங்கப்பட்டது.

கிட்டத்தட்ட 72,350 ரிங்கிட் இம் மாணவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது.

வாழ்க்கையில் வெற்றி பெற கல்வி மிகவும் முக்கியமானதாக விளங்குகிறது. அப்படி கல்வியில் சாதிக்கும் ஊக்குவிப்புகள் அதை விட முக்கியமானதாக விளங்குகிறது.

அதன் அடிப்படையில்தான் மாணவர்களுக்கு இந்த ஊக்குவிப்பு தொகைகள் வழங்கப்பட்டது.

இத் தொகை நிச்சயம் அம்மாணவர்களுக்கு நிச்சயம் பயன் தரும் என நான் நம்புகிறேன்.

குறிப்பாக இதுபோன்ற முயற்சிக்கு ஆதரவளித்த பேங்க் ரக்யாட் அறவாரியத்திற்கு நான் நன்றி.

இதுபோன்று மற்ற ஏஜென்சிகளுக்கு மாணவர்களுக்கு உதவும் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்று டத்தோ ரமணன் கேட்டுக் கொண்டார்.

இந்நிகழ்வில் பேங்க் ரக்யாட் அறவாரியத்தின் வாரியக் குழு உறுப்பினர் டத்தோ ஹாஜி ஷம்ரி சாலே, தலைமை நிர்வாகி சைபுல் ரிஷால், துணையமைச்சரின் முதன்மை செயலாளர் டத்தோ அன்புமணி பாலன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

+ - reset