நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் வணிகம்

By
|
பகிர்

சர்வதேச சந்தையில் இந்திய ரூபாய் மதிப்பு கடும் சரிவு

மும்பை:

அந்நிய செலாவணி சந்தை வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு கடந்த நான்கு வாரங்களில் இல்லாத அளவுக்கு புதன்கிழமை சரிவைக் கண்டுள்ளது.

வட்டி விகிதங்கள் மீதான அமெரிக்க மத்திய வங்கியின் மதிப்பீட்டை எதிர்நோக்கி முதலீட்டாளர்கள் காத்திருந்தன் விளைவாக பங்குச் சந்தை மற்றும் அந்நியச் செலாவணி சந்தைகளிலும் பாதிப்பை ஏற்படுத்தியது.

சர்வதேச சந்தையில் டாலருக்கான தேவை அதிகரித்தது ரூபாய் மதிப்பு சரிய காரணமாகியது.

வங்கிகளுக்கு இடையேயான அந்நியச் செலாவணி சந்தையில் புதன்கிழமை வர்த்தகத்தின் தொடக்கத்தில் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 73.87-இல் நிலைப்பெற்றது.இந்த மதிப்பு வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 73.66-ஆகவும், குறைந்தபட்சமாக 73.93-ஆக இருந்து,
வர்த்தகத்தின் இறுதியில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 26 காசுகள் சரிந்து 73.87-ஆக இருந்தது.ஆகஸ்ட் 26-ஆம் தேதிக்கு பிறகு நடைபெற்ற கடும் சரிவு இதுவாகும்.

தொடர்புடைய செய்திகள்

+ - reset