நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் வணிகம்

By
|
பகிர்

ஐக்கிய அரபுக அமீரகத்தில் (UAE) முகக்கவரி தொடர்பான கட்டுப்பாடுகள் தளர்வு: துபாய் சுகாதாரத்துறை அறிவிப்பு

துபாய்:

ஐக்கிய அரபுக அமீரகத்தில் (UAE) முகக்கவரி தொடர்பான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதாக அந் நாட்டு சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. 

Expo 2020 அனைத்துலகக் கண்காட்சி அடுத்த மாதம் அங்கு பெரிய அளவில் நடக்கவிருக்கும் நேரத்தில் இந்தப் புதிய அறிவிப்பை ஐக்கிய அரபுச் சிற்றரசு வெளியிட்டுள்ளது.

Covid UAE: Masks you can't wear at Dubai airport - News | Khaleej Times

தற்போது அங்கு கோவிட் 19 நோய்த்தொற்றுச் சம்பவங்களும் குறையத் தொடங்கியுள்ளன.

பொது இடங்களில் அனைவரும் முகக்கவரி அணிவது இதற்குமுன் ஐக்கிய அரபு அமீரகத்தில் கட்டாயம் ஆகும்.

இனி பொது இடங்களில் உடற்பயிற்சி செய்யும் போதும், கடற்கரையிலும் முடிதிருத்தும் இடங்களிலும் இரண்டு மீட்டர் பாதுகாப்பு இடைவெளியைக் கடைப்பிடித்தால் முகக்கவரி அணியத் தேவையில்லை.

எங்கெங்கு முகக்கவரி அணியத் தேவையில்லை என்ற அறிவிப்புப் பலகைகளும் பொது இடங்களில் வைக்கப்படவுள்ளன.

அக்டோபர் முதல் தேதி தொடங்கவுள்ள Expo 2020 கண்காட்சி 25 மில்லியன் வருகையாளர்களை ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- REUTERS  

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset