நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நெங்கிரி சட்டமன்றத் தேர்தலில் தேசிய முன்னணி போட்டியிடும்

கோலாலம்பூர்:

அடுத்த மாதம் 17-ஆம் தேதி நடைபெறவிருக்கும் நெங்கிரி சட்டமன்ற இடைத்தேர்தலில் ஒற்றுமை அரசாங்கத்தின் சார்பாகத் தேசிய முன்னணி போட்டியிடுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய முன்னணி, நம்பிக்கைக் கூட்டணியின் உயர்மட்ட தலைவர்கள் கூட்டத்தில் இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாக ஒற்றுமை அரசாங்கத்தின் தலைமைத்துவ செயலகம் இதனை உறுதிப்படுத்தியுள்ளது.

இதனிடையே இவ்விரு கூட்டணிகளும் ஒன்றாக இணைந்து தேசிய முன்னணி முன்னிறுத்தும் வேட்பாளருக்கு முழுமையான ஆதரவு வழங்குமென கூட்டத்தில் முடிவுச் செய்யப்பட்டதாக செயலகத்தின் தலைவர் அஷ்ரஃப் வாஜ்டி டுசுகி அறிக்கையின் வாயிலான தெரிவித்தார்.

பெர்சத்து கட்சியைச் சார்ந்த நெங்கிரி சட்டமன்ற உறுப்பினர் பதவி விலகியதால் நெங்கிரி சட்டமன்ற தொகுதி காலியானதாக கிளாந்தான் மாநிலச் சட்டமன்ற சபாநாயகர் அறிவித்தார்.

முன்னதாக, குவா முசாங் நாடாளுமன்ற உறுப்பினருமான அஸிசி அன்வார் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கத்திற்கு ஆதரவு தெரிவிப்பதாக கூறியவர்களில் ஒருவராவார்.

இருப்பினும் அவர் பாஸ் தலைமையிலான மாநில அரசாங்கத்திற்கான ஆதரவு தெரிவிப்பதாக கூறியிருந்தார்.

பின்னர், நெங்கிரி சட்டமன்றத் தொகுதியில் ஒற்றுமை அரசாங்கத்தின் சார்பில் போட்டியிடும் வேட்பாளருக்கு வழி விடுவதாகவும் அஸிசி கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

- தயாளன் சண்முகம்

தொடர்புடைய செய்திகள்

+ - reset