
செய்திகள் மலேசியா
பிரதமருக்கு ஆதரவு தெரிவித்த 6 எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இனி சுயேட்சையாக செயல்படுவார்கள்
கோலாலம்பூர்:
பிரதமர் டத்தோஶ்ரீ அன்வாருக்கு ஆதரவு தெரிவிப்பதாக உறுதியளித்த பெர்சத்து கட்சியின் 6 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இனி சுயேட்சையாகத் தங்கள் தொகுதிகளில் சேவையாற்ற போவதாகத் தெரிவித்தனர்.
இதனிடையே சம்பந்தப்பட்ட 6 பேர் சார்பாகப் பேசிய வாபுவான் நாடாளுமன்ற உறுப்பினர் சுஹைலி அப்துல் ரஹ்மான், தாங்கள் எந்த கட்சியிலும் இணையப் போவதில்லை என்பதையும் உறுதிப்படுத்தினார்.
"நாங்கள் சார்ந்துள்ள தொகுதி மக்களுக்கு உதவ அரசாங்கத்தின் ஒதுக்கீட்டை விரும்புகின்றோம். அந்த அடிப்பையில் மட்டுமே அன்வார் தலைமையிலான அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கின்றோம்" என அவர் மேலும் சொன்னார்.
இதனிடையே இந்த செய்தியாளர் சந்திப்பில், குவா முசாங் நாடாளுமன்ற உறுப்பினர் அஸிசி அபு நியாம், தஞ்சோங் காராங் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஸுல்கப்பெரி ஹனாபி, ஜெலி நாடாளுமன்ற உறுப்பினர் ஸாஹரி கெசிக், கோலா கங்சார் நாடாளுமன்ற உறுப்பினர் இஸ்கண்டர் சுல்கர்னைன் அப்துல் காலிட் ஆகியோர் கலந்து கொண்டனர்.
புக்கிட் கந்தாங் நாடாளுமன்ற உறுப்பினர் சையிட் அபு ஹுசேன் உடல்நலக் குறைவு காரணமாக செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொள்ளவில்லை.
முன்னதாக பிரதமருக்கு ஆதரவு தெரிவித்த பெர்சத்து கட்சியின் 6 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலக வேண்டிய அவசியமில்லை என நாடாளுமன்ற சபாநாயகர் ஜொஹாரி அப்துலின் முடிவு நியாயமானது என சுஹைலி கூறினார்.
கட்சியை காட்டிலும் தொகுதி மக்களின் நலன் தான் முக்கியம். மக்களுக்கான செயல்திட்டத்தை முன்னெடுக்க பிரதமர் அன்வார் தலைமையிலான அரசாங்கத்திற்கு ஆதரவு தெரிவிப்பதில் எந்தத் தவறும் இல்லை என்பதையும் சுஹாலி செய்தியாளர் சந்திப்பில் சுட்டிக் காட்டினார்.
தொடர்புடைய செய்திகள்
July 7, 2025, 12:35 am
மஇகாவுக்கு இனி அமைச்சர் பதவி தேவையில்லை: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்
July 6, 2025, 3:45 pm
பிரிக்ஸ் மலேசியாவுக்குப் புதிய சந்தை வாய்ப்புகளை வழங்குகிறது: பிரதமர் அன்வார்
July 6, 2025, 3:24 pm
சபா சட்டமன்றம் நவம்பர் 11-ஆம் தேதி கலையும்: சபாநாயகர்
July 6, 2025, 12:21 pm
பாலியில் ஃபெரி மூழ்கியது: மலேசியர் பாதிக்கப்பட்டிருக்கலாம்
July 6, 2025, 11:25 am