நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சமூக ஊடகங்களில் எழும் பிரச்சனைகளைத் தீர்க்க கடுமையான நடவடிக்கை எடுக்க மாமன்னர் உத்தரவு

பெட்டாலிங் ஜெயா:

சமூக ஊடகங்களைத் தவறாகப் பயன்படுத்துவதின் விளைவாக எழும் பிரச்சனைகளைக் கையாள்வதில் உறுதியாக செயல்படுமாறு தகவல் தொடர்பு அமைச்சகத்திற்கு மலேசியத் தொடர்பு பல்லூடக ஆணையத்திற்கும் மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் உத்தரவிட்டதாக தகவல் தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் தெரிவித்தார். 

சுல்தான் இப்ராஹிம் நேற்று காலை இஸ்தானா நெகாராவில் அவரது மாட்சிமைக்கு உரையாற்றும் அமர்வில் இவ்வாறு உத்தரவிட்டுள்ளார். 

அண்மையில், இணையப் பகடிவதையால் ஈஷா எனும் தற்கொலை செய்து கொண்டது குறித்தும் சுல்தான் இப்ராஹிமிடம் தெரிவித்ததாகவும் ஃபஹ்மி கூறினார்.

நேருக்கு நேர் அமர்வின் போது மாமன்னர் சமூக ஊடகங்கள் தொடர்பாரெழும் 'பிரச்சினைகள்' குறித்துக் கவலை தெரிவித்துள்ளார். 

சமூக ஊடகங்களை வாதிடுவதற்கும் பகிரங்கமான அவமானத்திற்கும் ஒரு தளமாகப் பயன்படுத்தக்கூடாது.

ஏனெனில் அது மோதலுக்கு காரணமாக இருக்கும்.

சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு பாதுகாப்பான தளமாக மாற்றுவதற்கான அனைத்து முயற்சிகளையும் அமைச்சகம் மற்ற நிறுவனங்களுடன் இணைந்து பலப்படுத்தும் என்று ஃபஹ்மி கூறினார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset