செய்திகள் இந்தியா
சித்துவுக்கு எதிராக வேட்பாளரை நிறுத்துவேன்: அமரீந்தர் சிங்
சண்டீகர்:
வரும் பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் மாநில காங்கிரஸ் தலைவர் சித்துவுக்கு எதிராக வலுவான வேட்பாளரை நிறுத்துவேன் என்று அண்மையில் முதல்வர் பதவியிலிருந்து விலகிய அமரீந்தர் சிங் அறிவித்துள்ளார்.
பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவராக நவஜோத் சித்துவுடன் நீடித்து வந்த மோதலால் முதல்வர் பதவியிலிருந்து அமரீந்தர் சிங் விலகினார்.
இதையடுத்து, பஞ்சாபின் புதிய முதல்வராக சரண்ஜீத் சிங் சன்னி பதவியேற்றார்.
இந்நிலையில், சன்னி மற்றும் சித்து தலைமையில் அடுத்த ஆண்டு நடைபெறும் பேரவைத் தேர்தலை காங்கிரஸ் கட்சி எதிர்கொள்ளும் என்று கட்சி மேலிடத் தலைவர் ஹரீஷ் ராவத் தெரிவித்தார்.
இதுதொடர்பாக முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங் அளித்த பேட்டியில்,
ராகுல், பிரியங்கா காந்தி ஆகியோர் எனது குழந்தைகள் போல் உள்ளனர். ஆனால், இந்த விவகாரத்தில் நான் மிகவும் புண்பட்டுள்ளேன். எனது ஆதரவு எம்எல்ஏக்களை கோவாவுக்கோ அல்லது பிற இடங்களுக்கோ நான் கொண்டு செல்லவில்லை. இதுபோன்ற அரசியலில் நான் ஈடுபடமாட்டேன் என்று ராகுல், பிரியங்காவுக்கு தெரியும். அவர்களுக்கு அனுபவமில்லை. அவர்கள் தவறாக வழிநடத்தப்படுகிறார்கள்.
பஞ்சாப் முதல்வராக சித்து வருவதற்கு எதிராக நான் முழு வீச்சில் போராடுவேன். அபாயகரமான மனிதரிடம் இருந்து நாட்டைப் பாதுகாக்க எந்தத் தியாகத்தையும் செய்யத் தயாராக உள்ளேன்.
அடுத்த ஆண்டு நடைபெறும் பேரவைத் தேர்தலில் சித்துவைத் தோல்வியடையச் செய்ய வலுவான வேட்பாளரை எதிர்த்து நிறுத்துவேன். அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து எனது நண்பர்களுடன் ஆலோசித்து வருகிறேன்' என்றார்.
தொடர்புடைய செய்திகள்
September 23, 2026, 3:13 pm
பிகாரில் கொட்டித்தீர்த்த கனமழை: 50 லட்சம் மக்கள் வெள்ளத்தால் பாதிப்பு
September 21, 2026, 10:20 pm
2030-க்குள் மணிக்கு 350 கி.மீ. வேகத்தில் செல்லும் ‘சுதேசி’ புல்லட் ரயில் தயாரிக்க இந்திய அரசு இலக்கு
September 16, 2026, 12:22 pm
இந்தியாவின் வட மாநிலங்களில் கடும் வெள்ளம்: 20 பேர் மாண்டனர்
September 14, 2026, 11:27 pm
மே.வங்கத்தில் 252 மதரஸாக்கள் மூட மாநில பாஜக அரசு உத்தரவு: மேலும் 100 கல்வி நிறுவனங்களுக்கு நோட்டீஸ்
September 12, 2026, 10:40 pm
பிரிக்ஸ் விருந்தினர்களுக்கு பிஹாரின் பிரபல உணவு வகை
September 10, 2026, 1:02 pm
பிரிக்ஸ் மாநாடு: புதின், ஷி ஜின்பிங், அன்வார் இப்ராஹிம் பங்கேற்கின்றனா்
September 7, 2026, 9:32 pm
