நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

துர்நாற்றம் வீசிய காரில் இருந்து இரு பெண்களின் சடலம் மீட்பு

புக்கிட் மெர்தாஜாம்:

துர்நாற்றம் வீசியபடி சாலையோரத்தில் நின்றுக் கொண்டிருந்த காரில் இருந்து இரு பெண்களின் சடலங்கள் மீட்கப்பட்டது.

இந்த சம்பவம் நேற்று மலை 5.30 மணியளவில் புக்கிட் மெர்தாஜாம், தாமன் ஸ்ரீ ராம்பாய் அருகே நிகழ்ந்தது.

அவ்வழியாக நடந்த சென்ற பொதுமக்கள் இச் சம்பவம் குறித்து போலிசாருக்கு தகவல் கொடுத்தனர்.

பூட்டிய காரின் கதவைத் திறக்க தீயணைப்புப் படைக்கு உதவி கோரப்பட்டது.

சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்புப் படையினர் சம்பந்தப்பட்ட காரின் கதவை திறந்தனர்.

காரின் முன் இருக்கையில் இரண்டு  பெண்களின் உடல்கள் மீட்கப்பட்டன.

20 வயதிற்குட்பட்ட அவ்விருவர் கடந்த ஐந்து நாட்களுக்கு  முன் இறந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.

அவ்வுடல்கள் மேல் நடவடிக்கைக்காக காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது என்று பினாங்கு தீயணைப்புப் படை பேச்சாளர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset