நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

பிரதமர் மோடிக்கு ரஷியாவின் உயரிய விருது

மாஸ்கோ:

பிரதமர் மோடிக்கு ரஷிய நாட்டின் உயரிய விருதான ஆர்டர் ஆஃப் செயின்ட் ஆண்ட்ரூ அப்போஸ்தலர் விருதை அந்நாட்டு அதிபர் விளாதிமீர் புதின் வழங்கினார்.

இரு நாடுகளிடையேயான உறவை மேம்படுத்துவதில் மிகச் சிறந்த பங்களிப்பை ஆற்றியதற்காக 2019ம் ஆண்டு இந்த விருது மோடிக்கு அறிவிக்கப்பட்டது.  தற்போது மோடிக்கு இவ்விருதை புதின் வழங்கினார்.

இயேசு கிறிஸ்துவின் முதல் சீடரான புனித ஆண்ட்ரூவை பெருமைப்படுத்தும் விதமாக அவருடைய பெயரில் 1698ம் ஆண்டு சர் பீட்டர் என்பவரால் இந்த உயரிய விருது ரஷியாவில் நிறுவப்பட்டது.

இதனிடையே, மோடியின் கோரிக்கையை ஏற்று ராணுவத்தில் பணியாற்றும் இந்தியர்களை விடுவிப்பதாக அதிபர் புதின் உறுதி அளித்துள்ளார்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset