நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

மகனுக்கு சிவப்பு அட்டை வழங்கியதால் இரும்பு கம்பியுடன்  திடலுக்கு நுழைந்த தந்தையால் பரபரப்பு

கோலபிலா:

மகனுக்கு சிவப்பு அட்டை வழங்கியதால் இரும்பு கம்பியுடன்  திடலுக்குள் நுழைந்த தந்தையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

எம்எஸ்எஸ்எம் கால்பந்துப் போட்டி கோலபிலாவில் நடைபெற்றது.

அப் போட்டியில் விளையாடிய வீரர் ஒருவருக்கு நடுவர் சிவப்பு அட்டை வழங்கினார்.

இதனால் அதிருப்தியடைந்த அவ் வீரரின் தந்தை இரும்பு கம்பியுடன் திடலுக்குள்  நுழைந்தார். இருப்பினும் அவரை ரேலா அதிகாரிகள் தடுத்தி நிறுத்தினர்.

ஆனால் அவ்வாடவர் தொடர்ந்து தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

இதனைத் தொடர்ந்து அவ்வாடவர் தன் மகனுடன் திடலை விட்டு வெளியேறினார்.

-பார்த்திபன் நாகராஜன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset