செய்திகள் விளையாட்டு
பாரீஸ் ஒலிம்பிக் தொடக்க விழா: தேசியக் கொடியை ஏந்தி செல்லும் பி.வி.சிந்து
புதுடெல்லி:
33-ஆவது ஒலிம்பிக் திருவிழா பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் வரும் 26-ஆம் தேதி முதல் ஆகஸ்டு 11-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இதில், 16 விளையாட்டுகளில் சுமார் 112 இந்திய வீரர்கள், வீராங்கனைகள் களமிறங்குகிறார்கள்.
கடந்த 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் ஒரு தங்கம், இரண்டு வெள்ளி மற்றும் நான்கு வெண்கலம் அடங்கிய ஏழு பதக்கங்களை இந்தியா வென்ற நிலையில், இம்முறை அதைவிட கூடுதல் பதக்கங்களை வெல்லும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இந்நிலையில் பாரீசில் நடைபெற உள்ள ஒலிம்பிக் தொடரின் தொடக்க விழா அணிவகுப்பில் இந்திய பெண்கள் சார்பில் பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து தேசிய கொடியை ஏந்தி செல்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்கள் சார்பில் டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல் தேசிய கொடியை ஏந்தி செல்வார் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்திய அணித்தலைவராக அறிவிக்கப்பட்டுள்ள ககன் நரங் 5 முறை ஒலிம்பிக்கில் பங்கேற்றவர்.
ஒலிம்பிக் அணித்தலைவராக மேரி கோம் பெயர் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ககன் நரங் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
September 9, 2026, 9:23 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: ரியல்மாட்ரிட் வெற்றி
September 9, 2026, 9:20 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: மென்செஸ்டர் சிட்டி வெற்றி
September 8, 2026, 8:30 am
அர்செனல் இன்னும் சிறப்பாகச் செயல்பட முடியும்: நிர்வாகி அர்தெதா
September 8, 2026, 8:27 am
எம்பாப்பே, ரொனால்டோவை முந்திய எர்லிங் ஹாலண்ட்: மெஸ்ஸியின் சாதனைக்கு பாதிப்பில்லை
September 7, 2026, 9:28 am
லா லீகா கால்பந்து போட்டி: பார்சிலோனா அபாரம்
September 7, 2026, 9:25 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: அர்செனல் வெற்றி
September 6, 2026, 9:45 am
சவூதி புரோ லீக்: அல் நசர் அணி தோல்வி
September 6, 2026, 9:42 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் சிட்டி வெற்றி
September 5, 2026, 10:04 am
