நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

அசாம் மாநிலத்தில் மோசமான வெள்ளம்: 28 மாவட்டங்களில் 23 லட்சம் மக்கள் பாதிப்பு

திஸ்பூர்:

 அசாம் மாநிலத்தில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் 28 மாவட்டங்களில் கிட்டத்தட்ட 23 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி இன்று அசாம் மாநிலம் ஃபுலர்டலில் உள்ள நிவாரண முகாமை பார்வையிட்டார். 

தொடர்ந்து அங்குள்ள மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார் ராகுல் காந்தி.

கடந்த ஜூன் மாதத்தில் இருந்து அசாமில் கனமழை பெய்து வருகிறது. பிரம்மபுத்திரா, பராக் நதிகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

அசாம் மாநிலத்தில் மொத்தமுள்ள 35 மாவட்டங்களில் 30 மாவட்டங்கள் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு உள்ளன.

இன்று அசாம் மாநில அரசு வெளியிட்ட அதிகாரபூர்வ தகவலின்படி, அசாமின் வெள்ள நிலைமை மோசமாக இருந்துவருகிறது. 

28 மாவட்டங்களில் கிட்டத்தட்ட 23 லட்சம் மக்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். பெரும்பாலான ஆறுகளின் நீர்மட்டம் தொடர்ந்து அபாயக் கட்டத்துக்கு மேல் உள்ளது.

இந்த ஆண்டு வெள்ளம், நிலச்சரிவு மற்றும் புயல் ஆகியவற்றில் இறந்தவர்களின் எண்ணிக்கை 78 ஆக அதிகரித்துள்ளது. இதில் வெள்ளத்தில் சிக்கி மட்டும் 66 பேர் உயிரிழந்தனர் என்று கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி இன்று அசாம் மாநிலம் ஃபுலர்டலில் உள்ள நிவாரண முகாமை பார்வையிட்டார். 

தொடர்ந்து அங்குள்ள மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார் ராகுல் காந்தி. 

சில்சார் விமான நிலையத்துக்கு வந்த அவர் அங்கிருந்து சச்சார் லக்கிபூர் சென்றார். தலாய் பகுதியில் அமைக்கப்பட்ட நிவாரண முகாமில் மக்களை சந்தித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset