நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

மேகராஜ் இயக்கத்தில் யோகி பாபு- டிஎஸ்ஜி கூட்டணியில் புதிய நகைச்சுவை கலந்த காதல் திரைப்படத்தின் பூஜையுடன் தொடங்கியது

சென்னை:

மேகராஜ் இயக்கத்தில் யோகி பாபு- டிஎஸ்ஜி கூட்டணியில் புதிய நகைச்சுவை கலந்த காதல் திரைப்படத்தின்  பூஜை & படப்பிடிப்பு ஜூலை 8-ஆம் தேதி தொடங்கவுள்ளது.

தமிழ்த் திரையுலகில் நகைசுவையில் தனிக்கென தனியிடம் பதித்தவர் யோகி பாபு. நகைச்சுவை மட்டுமில்லாமல் நாயகனாவும் கலக்கி வருகின்றார்.

இந்நிலையில், தற்போது ​​மேகராஜ் இயக்கத்தில் யோகி பாபு நடிக்கும் புதிய திரைப்படத்தில் அவரோடு டிஎஸ்ஜி இணைந்து நடிக்கவிருக்கும் தகவல் குறித்து அவர் தனது சமூக ஊடகத்தில் பகிர்ந்துள்ளார்.

மேலும், இப்படத்தில் விடிவி கணேஷ் மற்றும் பட்டிமன்றப் பேச்சாளரும் நடிகருமான ராஜா ஆகியோர் முக்கியக் கதாப்பாத்திரங்களில் நடிக்கவுள்ளனர்.

இத்திரைப்படத்தில் யோகிபாபு டிஎஸ்ஜியுடன் இணைந்து நடிக்கவுள்ளதால், இத்திரைப்படம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

டிஎஸ்ஜி இப்போது ரம்மி பட இயக்குனர் பாலகிருஷ்ணனின் படப்பிடிப்பிலிருந்து ஒரு சிறிய இடைவெளி எடுத்துள்ளார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் என 5 மொழிகளில் வெளிவந்த மார்க் ஆண்டனி திரைப்படத்தின் மூலம் உலகச் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் ஆதிக் ரசிச்சந்திரன்.

அத்திரைப்படத்தில் டிஎஸ்ஜியையும் அறிமுகம் செய்து, அவருக்கான சினிமா பயணத்தைத் தொடக்கி வைத்தவரும் ஆதிக் ரசிச்சந்திரன் தான் என்பது குறிப்பிடத்தக்கது.  அந்த வெற்றியைத் தொடர்ந்து பல மொழி படங்களில் டிஎஸ்ஜி பணியாற்றி வருகின்றார்.

- அஸ்வினி செந்தாமரை & தயாளன் சண்முகம்

தொடர்புடைய செய்திகள்

+ - reset