நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சுங்கை பாக்காப் இந்திய வாக்காளர்களுக்கு ஒற்றுமை அரசாங்க வேட்பாளரை வெற்றியடையச் செய்ய வேண்டும்: குணராஜ்

செந்தோசா:

சுங்கைப் பாக்காப் இடைத் தேர்தலில் 17 விழுக்காடு இந்திய வாக்காளர்கள் ஒற்றுமை அரசாங்க வேட்பாளர் டாக்டர் ஜொஹாரிக்கு வாக்களிக்க வேண்டும்.

தொகுதியில் மூன்று நாள் கடுமையான பிரச்சாரத்தை மேற்கொண்ட பின்னர் வெளியிட்டுள்ள பத்திரிக்கை அறிக்கையில் செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் மேற்கண்ட வேண்டுகோளை விடுத்துள்ளார்.

நாட்டிலுள்ள 18 முக்கிய கட்சிகள் ஒற்றுமை அரசாங்கத்துக்கு ஆதரவாக உள்ளன.

அதில் பங்கு வகிக்கும் இந்திய சார்பு  கட்சிகள் ஒற்றுமை அரசாங்கத்தை ஆதரித்து வருகின்றன.

ம.இ.கா, மைபிபிபி,  ஐபிஎஃப்,  மலேசிய மக்கள் சக்தி கட்சி,  கிம்மா ஆகிய  கட்சிகள் தேசிய முன்னணி ஆதரவு கட்சிகளாக இருந்து வருகின்றன.

அதே வேளையில்,  கெஅடிலான் இந்தியர்கள்,  ஜசெக கட்சியைச் சார்ந்த இந்தியர்கள்,  அமானா  தமிழ் பிரிவு ஆகியவை பக்காத்தானுக்கு  ஆதரவளித்து வருகின்றன. 

இந்தக் கட்சிகள் அனைத்துமே ஒற்றுமை அரசாங்கத்தின்கீழ் உள்ளன.

மலேசிய இந்தியர்களை பிரதிநிதிக்கும் கட்சிகளின் அடிப்படையில் பார்த்தால் பெரும்பாலான கட்சிகள் ஒற்றுமை அரசாங்கத்திற்கு ஆதரவாகவே உள்ளன என்பதை கருத்தில் வைத்து பார்க்கும் போதும் மத்தியில் ஒற்றுமை அரசாங்க ஆட்சி உள்ளது என்பதை வைத்துப் பார்க்கும் போதும் சுங்கை பாக்காப் இந்திய வாக்காளர்கள் ஒற்றுமை அரசாங்க வேட்பாளரை தேர்வு செய்வதே சமுதாயத்திற்கு நல்ல பலனை அளிக்கக் கூடியதாக இருக்கும்.

கடந்த காலத்தில் பாஸ் கட்சியின் வசம் சுங்கை பாக்காப் இருந்தபோது அங்கு பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு ஏற்படுத்தப்படாமல் இருந்தது.
 
குறிப்பாக குடிநீர் பிரச்சினை இப் பகுதியில் தலை தூக்கி இருந்தது.

சட்டமன்றம் என்றாலும் கூட சுங்கை பாக்காப்பை உட்படுத்திய நாடாளுமன்றமான நிபோங் திபால் ஒற்றுமைக் கூட்டணி வாசம் இருப்பதால் ஒற்றுமை கூட்டணி வேட்பாளர் வெற்றி பெறும்போது இங்குள்ள அடிப்படைப் பிரச்சினைகளுக்கு விரைந்து தீர்வு காணப்படும் சூழல் உள்ளது.

சமுதாயத்திற்கான மேம்பாட்டு பிரச்சனைகள் தொடர்பில் பிரதமரை  சந்தித்துப் பேசும் போது இணக்கப் போக்குடன் ஒற்றுமையுடன் இருந்து செயல்பட்டால் நல்ல தீர்வுகள் விரைந்து ஏற்படுத்தப்படும் வாய்ப்பு உள்ளது.

பினாங்கு மாநில அரசாங்கத்தின் நேரடி பார்வையில் சுங்கை பாக்காப் வரும் என்றால் இந்தியர் சார்ந்த பிரச்சினைகளுக்கும் பேச்சுவார்த்தைகள் மூலம் விரைந்து தீர்வு காணப்படலாம்.

10 ஏக்கள் பெற்ற இந்திய மாணவர்களுக்கு மெட்ரிகுலேஷன் வாய்ப்பு விரைந்து வழங்கப்படும் என பிரதமர் அறிவித்திருக்கிறார்.

இது போன்ற அறிவிப்புக்கள் இந்திய சமுதாயத்துக்கு உத்வேகத்தை  ஏற்படுத்தியுள்ளது.

இதே போன்ற தொடர் அறிவிப்புகள் வரவேண்டும் என்றால் கோல குபு பாரு வெற்றிக்குப் பிறகு இரண்டாவது சட்டமன்ற இடைத்தேர்தல் வெற்றியை நாம் ஒற்றுமை அரசாங்கத்திற்கு வழங்க வேண்டும்.

ஒற்றுமை அரசாங்கத்தின் ஆட்சி ஏற்பட்டு ஒன்றரை வருடங்கள் கடந்துவிட்டன.

எஞ்சியிருக்கும் அடுத்த மூன்றரை வருடங்களில் சமுதாயத்திற்கான தேவையை கோரிக்கைகள் மூலம் பிரதமரிடம் நாம் வெளிப்படுத்தியாக வேண்டும்.

அதற்கான வெற்றிகரமான சூழலை ஏற்படுத்த வேண்டுமானால் இந்தியர்கள் சார்ந்த கட்சிகள் அனைத்தும் ஒருங்கிணைந்த போக்கோடு செயல்பட வேண்டும்.

அடுத்து வரக்கூடிய பொது தேர்தலில் எந்த மாதிரி சூழ்நிலையை மலேசிய இந்தியர்கள் எதிர் நோக்குவார்கள் என்று தெரியாது.

அதற்குள் நமக்கு வேண்டியதை  பிரதமரிடமிருந்து  நாம் பெற்று விட வேண்டும் என்பது முக்கியம். இதற்கு ஒற்றுமையே மிகப்பெரிய பலமாக உள்ளது.

இந்த ஒற்றுமையை எடுத்துக்காட்டும் விதமாக சுங்கை பாக்காப் இடைத் தேர்தலில் இந்திய வாக்காளர்கள் ஒற்றுமை அரசாங்க வேட்பாளரான ஜொஹாரிக்கு தேர்ந்தெடுக்க வேண்டும் என டாக்டர் குணராஜ் கேட்டுக் கொண்டுள்ளார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset