நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கவிதைகள் மனதில் நிலைத்து நிற்பதற்குக் காரணம் மொழியும், கவிதை நடையுமுமே: டத்தோஸ்ரீ சரவணன்

கோலாலம்பூர்:

கவிதைகள் மனதில் நிலைத்து நிற்பதற்குக் காரணம் மொழியும், கவிதை நடையும் தான் என்று மஇகா துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ  எம். சரவணன் கூறினார்.

நம் நாட்டின் இலக்கிய உலகில் எழுத்தும் படைப்பும், நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து வருவதைக் கண்டு பெரிதும் மகிழ்ச்சியடைகிறேன்.

தொடர்ச்சியான நூல் வெளியீட்டு விழாக்களைக் காண்பது மனதிற்கு இதமளிக்கிறது. 

இன்று பங்சார் எ. அண்ணாமலையின் கவிதை நூல் வெளியீட்டு விழாவைத் தலைமையேற்று வெளியிட்டதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

கவிதை என்பது ஒரு தனி மொழி. அந்த மொழிக்கு நிறைய சக்தி உண்டு. 

என்றோ படித்த வரிகள் இன்றும் மனதில் நிலைத்து நிற்பதற்குக் காரணம் அந்த மொழியும், கவிதையின் நடையுமே.

இதனை அடிப்படையாக கொண்டு அதிகமான படைப்புகளை எழுத்தாளர்கள் படைக்க வேண்டும் என்று டத்தோஸ்ரீ சரவணன் வலியுறுத்தினார்.

சுவை புதிது, நயம் புதிது 
வளம் புதிது சொற் புதிது 
ஜோதி கொண்ட நவ கவிதை எந்நாளும் அழியா மஹா கவிதை
                   - பாரதியார்

இவ்வாறு தனது உரையில் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் வகையில் நயம்பட உரை நிகழ்த்தினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset