நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சொகுசு கார் திருட்டுச் சம்பவத்தில் ஈடுப்பட்டு வந்த 'கே-பாய்ஸ்' கும்பல் காவல்துறையினரிடம் சிக்கியது

ஷா ஆலம்: 

கடந்த மாதம் ஜூன் 27-ஆம் தேதி கோலாலம்பூர், ஜொகூர் பாரு, பேராக் ஆகிய மூன்று மாநிலங்களில் ஐந்து ஆண்கள், இரண்டு பெண்கள் என மொத்தம் எழுவர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து சொகுசு வாகனங்களைத் திருடி விற்றதாக சந்தேகிக்கப்படும் கே-பாய்ஸ் கும்பல் காவல்துறையினரிடம் சிக்கியுள்ளது. 

ஜூன் 24-ஆம் தேதி கெப்போங்கில் வீடு புகுந்து கொள்ளையடிக்கப்பட்டதாகக் கிடைத்த புகாரின் பேரில் 31 முதல் 54 வயதுடைய சந்தேக நபர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டதாக சிலாங்கூர் காவல்துறைத் தலைவர் ஹுசைன் ஓமர் கான் தெரிவித்தார்.

42 வயதுடைய நபரிடமிருந்து இந்தச் சம்பவம் தொடர்பாகக் காவல்துறைக்குப் புகார் கிடைத்துள்ளது. 

அவர் கெப்போங் Taman Ehsan-னிலுள்ள தனது முதலாளியின் வாடகை வீடு உடைக்கப்பட்டு Audi R8, Porsche 718 Cayman, Suzuki Swift  ஆகிய சொகுசு கார்கள் திருடப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

சம்பவத்தின் போது, ​​புகார்தாரரின் முதலாளி சீனாவில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

மேலும் இழப்பு RM700,000 என மதிப்பிடப்பட்டுள்ளது.

கிடைத்த தகவலின் அடிப்படையில், கோலாலம்பூர், ஜொகூர் பாரு, பேராக் ஆகிய இடங்களைச் சுற்றியுள்ள பல இடங்களில் காவல்துறையினர் சோதனை நடத்தினர். 

இந்நடவடிக்கை கும்பல் தலைவன் உட்பட அனைத்துச் சந்தேக நபர்களையும் கைது செய்ய வழிவகுத்தது.

38 வயதான இந்தக் கும்பலின் மூளையாக செயல்பட்டவர் 16 குற்றப் பதிவுகளையும், போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக ஐந்து பதிவுகளையும் வைத்திருப்பதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

சந்தேகநபர்கள் அனைவரும் நாளை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டதாகவும், குற்றவியல் சட்டத்தின் பிரிவு 457 மற்றும் பிரிவு 379A இன் படி வழக்கு விசாரணை மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் கூறினார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset