நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சிங்கப்பூர் - மலேசிய போலிசார் நடத்திய சோதனையில் 43 பேர் கைது

சிங்கப்பூர்:

சட்டவிரோதமாகச் சூதாட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் 43 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிங்கப்பூர் போலிஸ் அதிகாரிகளும் மலேசிய போலிஸ் அதிகாரிகளும்   இணைந்து இந்த நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

கைது செய்யப்பட்டவர்கள் 34 வயதுக்கும் 82 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்.

இதில் 9 பேர் மீது இன்று நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது.

எஞ்சியவர்கள் மீது விசாரணை தொடர்வதாக போலிஸ் தரப்பில் குறிப்பிட்டது.

கடந்த இரு தினங்களும் கூட்டுக் காவல்துறைச் சோதனைகள் பல இடங்களில் ஒரே நேரத்தில் நடத்தப்பட்டன.

அப்போது 37 ஆண்களும் 2 பெண்களும் கைதுசெய்யப்பட்டனர்.

மலேசிய போலிஸ் அதிகாரிகள் 4 சிங்கப்பூர் ஆடவர்களை மலேசியாவில் கைது செய்தனர்.

ரொக்கம், நகை, சொகுசுக் கடிகாரங்கள், 40க்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகள் ஆகியவை விசாரணைக்காகப் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

சூதாட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்குப் பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் மின்கருவிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset