நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

363 தமிழ்ப்பள்ளிகளுக்கு 25.41 மில்லியன் ரிங்கிட் பகிர்ந்தளிக்கப்பட்டது: சிவக்குமார் கேள்விக்கு கல்வியமைச்சு பதில்

கோலால்ம்பூர்:

இவ்வாண்டு 363 தமிழ்ப்பள்ளிகளுக்கு 25.41 மில்லியன் ரிங்கிட் பகிர்ந்தளிக்கப்பட்டது.

பத்துகாஜா நாடாளுமன்ற உறுப்பினர் சிவக்குமார் எழுப்பிய கேள்விக்கு கல்வியமைச்சு இவ்வாறு பதிலளித்தது.

இவ்வாண்டு அரசு உதவி பெறும் பள்ளிகளை மேம்படுத்தவும், சிறு பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளவும் கல்வி அமைச்சு  134.44 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு செய்துள்ளது.

இந்த மொத்த ஒதுக்கீட்டில், 25.41 மில்லியன் ரிங்கிட், அரசு உதவி பெறும் பள்ளிகளின் அந்தஸ்துள்ள 363 தமிழ்ப்பள்ளிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டு வருகிறது.

ஒவ்வொரு பள்ளியும் அந்தந்த பள்ளி மேலாண்மை வாரியத்தின் விண்ணப்பத்திற்கு உட்பட்டு, கழிப்பறைகளை மேம்படுத்தவும் பராமரிக்கவும் 70,000 ரிங்கிட்டை பெறும் என கல்வியமைச்சு எழுத்துப்பூர்வமான பதிலளித்துள்ளது.

இது மலேசிய மடானி அரசாங்கத்தின்  சமத்துவம், உள்ளடக்கத்தின் மதிப்புகளை பிரதிபலிக்கிறது.

மேலும் பிரதமரின் அக்கறையும் தொலைநோக்கு பார்வையும் கொண்ட தலைமையின் பலனாக தமிழ்ப்பள்ளிகள் பயனடைகிறது என்று சிவக்குமார் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset