நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பூமிபுத்ரா மாணவர்களை பாதிக்காமல் அனைத்து  மாணவர்களுக்கும் மெட்ரிகுலேஷன் வாய்ப்பை எப்படி வழங்க முடியும்?: டத்தோ சரவணக்குமார்

நீலாய்:

பூமிபுத்ரா மாணவர்களை பாதிக்காமல் அனைத்து மாணவர்களுக்கும் மெட்ரிகுலேஷன் இட வாய்ப்பை எப்படி வழங்க முடியும்.

நீலாய் தேசியக் கூட்டணியைச் சேர்ந்த டத்தோ சரவணக்குமார் இக்கேள்வியை எழுப்பினார்.

எஸ்பிஎம் தேர்வில் 10ஏ, அதற்கும் மேற்ப்பட்ட அனைத்து மாணவர்களுக்கும் மெட்ரிகுலேஷன் கல்வி வாய்ப்பு வழங்கப்படும்.

குறிப்பாக பூமிபுத்ரா மாணவர்களை இது பாதிக்காது என்று பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

பிரதமரின் இந்ந அறிவிப்பு மகிழ்ச்சியை தந்தாலும், அது பல கேள்விகளை எழுப்புகிறது.

முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜீப் துன் ரசாக் காலத்தின் 2,200 மெட்ரிகுலேஷன் வாய்ப்பு வழங்கப்பட்டது.

இந்த இடங்கள் போதாத நிலையில் துன் மகாதீர் ஆட்சிக் காலத்தில் அவ்விடங்கள் குறைக்கப்பட்டது.

இந்நிலையில் 10ஏ, அதற்கும் மேல் எடுக்கும் மாணவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என பிரதமர் அறிவித்துள்ளார்.

நாட்டில் மொத்தமாகவே மெட்சிகுலேஷனில் எத்தனை இடங்கள் ஒதுக்கப்படுகிறது.

இதில் பூமிபுத்ராக்களை பாதிக்காமல் எப்படி மற்ற இன மக்களுக்கு அவ்வாய்ப்புகளை வழங்குவது.

குறிப்பாக 10 ஏக்கு கீழ் எடுக்கும் மாணவர்களுக்கு மெட்ரிகுலேஷனில் இடம் கிடைக்காதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

ஆகையால் மெட்ரிகுலேஷன் விவகாரத்தில் பிரதமரின் அறிவிப்பு பலருக்கு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆகவே இவ்விவகாரத்தில் அரசாங்கம் உரிய விளக்கங்களை தர வேண்டும் என்று டத்தோ சரவணக்குமார் கேட்டுக் கொண்டார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset