
செய்திகள் வணிகம்
தீபிகா படுகோன் ஒரு புத்திசாலி முதலீட்டாளர்
மும்பை:
திரைக் கலைஞர் தீபிகா படுகோன் வயிற்றில் கருவைச் சுமந்திருக்கும் சமயத்தில் ஹீல்ஸ் அணிந்திருந்த படம் பேசுபொருளானதை கவனித்திருப்போம்.
எத்தனை பேர் கவனித்திருக்கிறோம் என்று தெரியாவிட்டாலும் தீபிகா ஒரு புத்திசாலி முதலீட்டாளர் என்பதும் அதிகம் பேசப்படும் விஷயம்தான்.
நிலம், வீடு, தங்கம். இந்த மூன்றில் மட்டுமின்றி, ஸ்டார்ட் அப் நிறுவனங்களிலும் பெருமளவு முதலீடு செய்துள்ளார். 2017ஆம் ஆண்டில் கா என்டர்பிரைசஸ் தொடங்கினார்.
Purplle, Furlenco, Epigamia, BluSmart, Supertails போன்ற நிறுவனங்களில் முதலீடு செய்தார். அறைகலன்கள் வாடகைக்கு விடும் நிறுவனம், அழகுசாதனங்கள் விற்கும் தளம், உணவு பதப்படுத்தும் நிறுவனம், எலக்ட்ரிக் கார் நிறுவனம், டெக் நிறுவனம் என்று இவருடைய முதலீடுகள் பல துறைகளில் இருக்கிறது.
எல்லாமே ஏறுமுகத்தில் இருக்கிறது என்பது முக்கியம்.
82°E என்கிற தீபிகாவின் நிறுவனம் இந்த ஆண்டில் ஐம்பது கோடி முதலீட்டைத் திரட்ட திட்டமிட்டுள்ளது. நேராக வாடிக்கையாளர்களுக்கு பர்சனல் கேர் தயாரிப்புகளை விற்பனை செய்கிறது 82°E.
இந்தியத் திரைக்கலைஞர்களில் மிகத் திறமையாகத் தான் சம்பாதித்த பணத்தை நிர்வாகம் செய்பவராக இருக்கிறார் தீபிகா.
தற்போதைய சொத்து மதிப்பு சுமார் 500 கோடி. விரைவில் இந்தியாவின் பில்லினியர்கள் பட்டியலில் விரைவில் இடம் பிடிப்பார் தீபிகா படுகோன்.
#deepikapadukone #Woman #பெண்
- கோகிலா பாபு
தொடர்புடைய செய்திகள்
March 22, 2025, 4:05 pm
அமெரிக்காவில் ஐந்து மலேசியர்கள் 214 மில்லியன் அமெரிக்க டாலர் மோசடியில் சிக்கினர்
March 21, 2025, 12:53 pm
66 மணி நேரத்திற்கு இடைவிடாது காயா ராயா பெருநாள் சந்தை அதிகாரப்பூர்வமாக தொடங்கியது
March 11, 2025, 9:42 am
அமெரிக்கப் பங்கு விலைகள் கடுமையாக சரிந்தன
March 8, 2025, 4:54 pm
புதிய ரேஞ்ச் ரோவருக்கு இலங்கையில் அதிக டிமான்ட்
March 4, 2025, 2:48 pm
அமெரிக்காவிலிருந்து இறக்குமதியாகும் பொருள்கள் மீது கூடுதலாக 15% வரி: சீனா அறிவிப்பு
February 20, 2025, 5:14 pm
மலிவு விலையில் iPhone 16e
February 13, 2025, 10:48 pm